”
Arul.2009/FB/#69043
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ) அலுவலகத்தின் 5 பிரிவுகளில் உள்ள 67 கோப்புகள் மற்றும் 23 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புக்கள் அடங்கிய ஆய்வறிக்கை தொடர்பாக 30.07.2026 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை நிறுவனத்தில் எளிமையாகவும் சிறப்பாகவும் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்தும் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
தமிழ்நாடு எவ்வாறு தொழில் வளர்ச்சியில் முன்னேறி இருக்கிறதோ அதேபோல இணையவுலகிலும் கணினித் தமிழும் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று பற்பல சான்றுகளோடும் இனிமை பொங்கும் தமிழ் வலைதளங்களைத் குறித்து விவரித்ததோடு அலுவலக வரைவுகளைப் பற்றியும் விளக்கமாக இயம்பினேன்.
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே! என்று வலியுறுத்தினேன்.
துறையின் கணக்கு அலுவலர் திரு. இராஜேந்திரன், நிறுவன செயலாளர் திரு. புவனேஷ், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி மு.ஜீவா, உதவியாளர் திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment