”
Arul.2009/FB/#69007
செய்தி வெளியீடு எண்: 272
நாள்: 23.06.2026
தமிழ் வளர்ச்சித் துறை
2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு !
தமிழ் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் !
தமிழ் மொழியின் வளத்தையும், அறிவுப் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ” சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை ” செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ். 01.01.2025 முதல் 31.12.2025 வரை தமிழில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல்கள் மரபுக்கவிதை. புதுக்கவிதை, புதினம் சிறுகதை, நாடகம் ( உரைநடை. கவிதை ), சிறுவர் இலக்கியம், திறனாய்வு. .மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்,
நுண் கலைகள் ( இசை, ஓவியம், நடனம், சிற்பம் ), அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித்தமிழ், பயண இலக்கியம் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு. தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல். மருந்தியல், உடலியல், நலவியல், தமிழ் மருத்துவ நூல்கள் ( சித்தம், ஆயுர்வேதம் ). சமயம், ஆன்மிகம், அளவையியல், கல்வியியல், உளவியல், வேளாண்மையியல், கால்நடையியல், சுற்றுப்புறவியல், கணினியியல், நாட்டுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம், இதழியல், தகவல் தொடர்பு, பிற சிறப்பு வெளியீடுகள், விளையாட்டு. மகளிர் வாழ்வியல் , இலக்கியம்,தமிழர்
ஆகிய 33 வகைப்பாடுகளின் வழியாக பரிசுப் போட்டிக்காக வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு ரூ.50,000/-, அந்நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு ரூ.25,000 / – என பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில்
( tamilvalarchithurai@tn.gov.in ) விலையேதுமின்றிப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கப் பெறலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2026 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு: 044-28190412 / 28190413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை – 9
ஆங்கில மொழியாக்கம்
Press Release No: 272
Date: 23.06.2026
Tamil Development Department
Tamil Nadu Government Award for Best Tamil Books Published in the Year 2025 !
Tamil Writers Can Apply !
With a view to safeguarding and fostering the richness and intellectual heritage of the Tamil language, the Tamil Development Department of the Government of Tamil Nadu, annually implements the ‘Best Tamil books award scheme’.
Under this scheme, entries are invited for first – edition Tamil Books published between 01.01.2025 to 31.12.2025.
The competition features 33 categories, Traditional Poetry, Modern Poetry, Novel, Short Story, Drama ( Prose, Poetry ), Children’s Literature, Literary Criticism, Language History, Linguistics, Language Development, Grammar, Books Translated into Tamil from Other Languages, Fine Arts (Music, Painting, Dance, Sculpture) Dictionary, Encyclopedia, Technical Terms / Neologism, Administrative Tamil Travel Literature, Biography, Autobiography, History of Country, Epigraphy, Archaeology, Maritime & Trade Routes, Excavation, Mathematics, Astronomy, Physics, Chemistry, Engineering, Technology, Anthropology, Sociology, Geography, Geology, Law, Political Science / Politics Economics, Commerce, Management Studies, Pharmacology, Physiology, Health Science, Tamil Medical Books (Siddha, Ayurveda), Religion, Spirituality, Logic, Education, Psychology, Agriculture, Veterinary Science, Environmental Science Ecology, Computer Science, Folklore, Tamil Literature by Diaspora / Overseas Tamil Writers Journalism, Mass Communication, Other Special Publications, Sports / Games Women’s Literature, Tamil Life and Culture / Tamil Lifestyle
Welcome to the prize competition.
The author of the book selected as the best in each category will be awarded a prize amount of Rs. 50,000/- and the publisher who published the book will be awarded Rs. 25,000/- along with a certificate of appreciation.
The application form and guidelines can be downloaded free of cost from the website of the Tamil Development Department ( tamilvalarchithurai@tn.gov.in ) and submitted.
The last date for receipt of completed applications is 31.08.2026.
For further details, please contact
044 – 28190412 / 28190413.

Add a Comment