POST: 2026-06-13T11:05:08+05:30

”
Arul.2009/FB/#68995

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

10.06.2026 புதன்கிழமையன்று பிற்பகல் 3.00 மணியளவில் தமிழ்நாடு கனிம நிறுவனத்திலும்

பிற்பகல் 4.30 மணியளவில் வணிகவரி ஆணையரகத்திலும் உள்ள பிரிவுகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரையாற்றினேன்.

அக்கூட்டங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு, அதனைச் செயற்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கப்பட்டன.

அக்கலந்தாய்வுகளில்
2000 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி – பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசாணையில் தெரிவித்துள்ளபடி அரசு அறிவிப்பு பலகைகளில் தமிழ் சொற்கள் இடம்பெறுவதற்கும் நாள்தோறும் திருக்குறள் ஒன்றை பொருளுடன் எழுதி வைக்கவும்

2008 ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அரசாணையில் தெரிவித்தபடி அலுவலக ஆணை, கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் திங்கள் நாள் திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டன.

மேலும் 1998 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி பண்பாடு (மற்றும்) அறநிலையத்துறை அரசாணையில் ஆணையிடப்பட்டதற்கிணங்க அரசு ஊழியர் பெயருக்கு முன் ஊர் /தந்தையின் பெயரின் முதல் எழுத்தினை தமிழிலேயே எழுதுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் உதவிப் பொது மேலாளர் திரு.ந.இரா.சங்கர்,தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்
திருமதி ந. நிலா, உதவியாளர்கள் திரு.மு.மூவேந்தன் மற்றும் திரு.ஜெ.உதயரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

வணிகவரி ஆணையரகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் நிருவாக அலுவலர் திருமதி சு சிவப்பிரியா, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் திருமதி வே.ரேவதி, தட்டச்சர் திருமதி த. விஜயலட்சுமி, தட்டச்சர் செல்வி சு அமிர்தேஸ்வரி, தட்டச்சர் உ. பவித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *