”
Arul.2009/FB/#68987
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன அலுவலகத்திலுள்ள
மூன்று பிரிவுகளில் ஒன்பது இருக்கைகளிலுள்ள 156 கோப்புகள் மற்றும் ஒன்பது ஒன்பது பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 03.06.2026 புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறுவன அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன மேலாளர் மற்றும் நிருவாக அலுவலர் திருமதி மா. லதா, மேலாளர் திருமதி ஆர் நித்யஸ்ரீ, உதவி மேலாளர் திருமதி ப. சரளா, தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, உதவியாளர் திருமதி க. புவனேசுவரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment