”
Arul.2009/FB/#68983
திருமதி க. பவானி அவர்களுக்குப் பணிநிறைவுப் பாராட்டு!
தமிழ் வளர்ச்சித்துறையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், கிருட்டினகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளாகச் சிறப்பாகப் பணியாற்றிய திருமதி க. பவானி அவர்கள், மேனாள் துணை இயக்குநர்களான திரு. ம. சி. தியாகராசன் (30.06.2022), திருமதி தி. உமா (30.06.2022), திருமதி ப. இராஜேஸ்வரி (28.02.2023), முனைவர் மு. சம்சுதீன் (31.05.2023), திரு. கா. பொ. இராசேந்திரன் (31.05.2023), திருமதி அ. புவனேசுவரி (31.03.2024), திரு. ப. நாகராசன் (31.07.2024), திருமதி பி. ரெஜினாள் மேரி (31.05.2025), திரு. வ. சுந்தர் (30.04.2026) ஆகியோர் வரிசையில், 31.05.2026 அன்று அகவை முதிர்வின் காரணமாகப் பணிநிறைவு பெற்றார்.
இவர் சென்னை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநராகவும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் முதல் பெண் இயக்குநராகவும் (கூடுதல் பொறுப்பு) பொறுப்பு வகித்துப் பெருமையுடன் பணிநிறைவு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப்பணியிலிருந்து விடைபெறும் திருமதி க. பவானி அவர்களுக்கு, கடந்த 29.05.2026 வெள்ளிக்கிழமையன்று, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சூழ்ந்து எடுத்துக் கொண்ட குழுப்படம்

Add a Comment