POST: 2026-05-21T10:05:23+05:30

”
Arul.2009/FB/#68972

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

20.05.2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 04.30 மணியளவில் தமிழ்நாடு நில சீர்திருத்தத் துறை மற்றும் நகர்ப்புற நிலவரி மற்றும் நகர்ப்புற நிலவரி உச்சவரம்புத் துறையிலும் உள்ள பிரிவுகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரையாற்றினேன்.

அக்கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு, அதனைச் செயற்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கப்பட்டன.

இரு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு நில சீர்திருத்தத் துறையைச் சேர்ந்த உதவி ஆணையர் திரு.பு சுப்புராஜ், உதவி ஆணையர் திரு.து. செந்தில், உதவி ஆணையர் திரு.சு சரவணன் நகர்ப்புற நிலவரி மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்புத்துறையைச் சேர்ந்த உதவி ஆணையர் திரு ரா பாலாஜி மற்றும் உதவி ஆணையர் திருமதி அமுதா தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி ரா. சிவசங்கரி, திருமதி கா.சித்ரா கண்காணிப்பாளர் திருமதி க. மலையரசி, உதவியாளர் க. புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *