”
Arul.2009/FB/#68967
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
13.05.2026 புதன்கிழமையன்று முற்பகல் 11.00 மணியளவில் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்திலும் ,
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தின் அலுவலகத்தில் முற்பகல் 12.30 மணியளவிலும்
முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தில் பிற்பகல் 5 மணியளவில் அந்தந்த அலுவலகங்களில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள், பெயர் / தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வுசெய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரையாற்றினேன்.
அக்கூட்டங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு, அதனைச் செயற்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் திட்ட இயக்குநர் திரு. பழனிகுமார்
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திரு. எ. பழனி மற்றும் உதவியாளர்கள் திரு. சு. முத்துசாமி, திரு.ஜெ. உதயரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் உதவி இயக்குநர் திரு. புகழேந்தி, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி ஜெ. சாவித்திரி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்ககத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இணை இயக்குநர் மேஜர் (ஓய்வு) எம். சுரேஷ்குமார், துணை இயக்குநர் (மறுவாழ்வு)
லெப்டினன்ட் கே.செந்தில்குமார், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி க. மலையரசி மற்றும் உதவியாளர் திரு. ஜெ. சத்தியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Add a Comment