”
Arul.2009/FB/#68960
எண்ணத்தேர் ஓடிய எழிலார்ந்த சீன தேசத்தின் தலைநகரில் யான்
வண்ணத்துப்பூச்சியாய் …..
பயணங்கள் தொடர்கின்றன
ஆனால், சில பயணங்கள் நெஞ்சின் ஆழத்தில் தங்கிவிடுகின்றன.
சரியாக 18 ஆண்டுகளுக்கு முன்பு, 17.01.2008 வியாழக்கிழமையன்று சீனாவின் தலைநகரம் பீஜிங்கு பயணம் மறக்கவியலாதது.
வெண்ணிறப் போர்வை போர்த்தியது போல எங்கும் உறைபனி.
மூச்சுக் காற்றுக் கூடப் புகையாக வெளிவரும் அந்தக் கடுங்குளிரில், சீன தேச தலைநகரின் வீதிகளில் நடந்தபோது ஏற்பட்ட அந்த அனுபவம் அலாதியானது.
இரண்டு வெவ்வேறு பரிமாணங்களில் எடுக்கப்பட்ட ஓளிப்படங்கள், அப்பயணத்தின்மனநிலைகளைச் சொல்கின்றன.
ஒன்று, வரலாற்றுப் பெருமை பேசும் இடத்தின் கம்பீரம்;
மற்றொன்று, உள்ளூர் மக்களின் வாழ்வியலோடு இணைந்து பயணித்த அந்த நெகிழ்வான தருணம்.
சங்க இலக்கியத்தில் ‘பனிபடு சோலை என்று குளிரை சுட்டிக் காட்டுவது போல பீஜிங் மாநகரமே பனிச்சோலையாகக் காட்சியளித்தது.
மொழியால் நாம் வேறுபட்டிருந்தாலும், விழிகளால் புதிய பண்பாட்டை விழிகள் வியந்து விழுங்கியது.
அயல் நாட்டுப் பயணங்கள் நமக்கு நிலப்பரப்புகளை மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை,
புதிய வாழ்வியல் நெறிகளையும் வழங்குகின்றன.

Add a Comment