Arul.2009/FB/#6853
தினமணி
22 1 2026
வியாழக்கிழமை
பொக்கிஷம்
பக்கம் எண் : 2
ஔவை ந.அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்
பள்ளிப் பருவத்திலேயே நூலகத்துக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை எனது தாய், தந்தை இருவரும் ஏற்படுத்தினர்.
அதையடுத்து பொது நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்.
தற்போது எனது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் நூல்களைச் சேகரித்து படித்து வருகிறேன்.
எனது வீட்டு நூலகத்தில் ஆயிரக்கணக்கான சர்வதேச, தேசிய, மாநில அளவிலான புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் உள்ளன.
அவற்றில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் எனில்,
வீ.அரசு, புலவர் செந்தலை கௌதமன் ஆகியோரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட ‘அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் 27 தொகுதிகள்’
அருட்பா சரவணன் தொகுத்துள்ள ‘சங்க இலக்கியங்கள்’,
வீ.பா.கணேசனின் ‘பன்முகப் பார்வையில் தாகூர்’,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடான ஔவை நடராசனின் ‘செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்’,
‘மத்த விலாசப் பிரகசனம்’,
கவிஞர் வைரமுத்துவின், ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’,
கவிஞர் நீலமணியின் ‘வரங்களுக்குப் பின் தவங்கள்’,
நயவுரை நம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகனின் ‘நாலாயிரத் திவ்விய பிரபந்த உரை’,
மரபின் மைந்தன் முத்தையாவின் ‘பழகிப் பார்த்ததில் இவர்கள்’,
புலவர் கா.கோவிந்தனின் ‘சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை’,
பி.ஆர். நந்தாவின் ‘திரீ ஸ்டேட்ஸ்மென்’ (ஆங்கிலம்),
டாக்டர் அரசேந்திரனின் ‘ஆக்ஸ்போர்டு-எடிமோலாஜிகல் டிக்ஸனரி’ தமிழ் மற்றும் இந்தோ ஐரோப்பியன் மொழிகள் ஆகியவற்றை விரும்பிப் படிப்பேன்.

Add a Comment