Arul.2009/FB/#6841
எழுத்துலகச் சிற்பிக்கு எழில்மிகு நினைவுத்தூண்! –
இராணிப்பேட்டையில் கள ஆய்வு
இந்திய விடுதலை வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தியாகச் செம்மல், பொதுவுடைமைத் தத்துவத்தின்பால் ஈர்ப்புக் கொண்ட மார்க்சியச் சிந்தனையாளர், பன்மொழிப் புலவர், கவிஞர் எனப் பன்முகத் திறன் கொண்ட பெருமகனார் திரு. க.ரா. ஜமதக்னி (15.04.1903 – 27.05.1981).
புரட்சியாளர் காரல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலையும், மகாகவி காளிதாசரின் ‘இரகுவம்சம்’, ‘மேகதூதம்’ போன்ற காவியங்களையும் தமிழுக்குத் தந்த இணையற்ற மொழிபெயர்ப்பாளராவார்.
இத்தகைய மாபெரும் ஆளுமையின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவருக்கு நினைவுத்தூண் நிறுவப்படும் என்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.
தமிழுக்கும், நாட்டுக்கும் தொண்டாற்றிய அறிஞர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் இச்சிறப்பான அறிவிப்பினைச் செயற்படுத்தும் வகையில் இராணிப்பேட்டையில் இதற்கெனத் தெரிவு செய்யப்பட்ட இடத்தினை 4.9.25 வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பெற்றது.

Add a Comment