POST: 2026-01-04T12:38:07+05:30

Arul.2009/FB/#6835

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை

( 03.01.2026 சனிக்கிழமை முதல்-09.01.2026 வெள்ளிக்கிழமை வரை)

இடம்:
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலாச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்

பேரன்புப் பெருந்தகையீர்

வணக்கம்

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிக் குலவும் தங்கத் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அமைவுறத்திகழும் அழகமைந்த ஊர்.

சோழர் காலத்தில் குடந்தை என்னும்
குடமூக்கு என்றும் அழைக்கப்பெற்ற
கும்பகோணம்,

அது திருக்கோயில்கள் நிறைந்த திருமங்கலத் திருநகரம்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் போற்றிசைத்துப் பாடிய வன நகரம்.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மேன்மைத் தமிழில் “திருக்குடந்தைப் புராணம்’ என்னும் தெய்வத்தமிழ் அணிகலனைப்பெற்ற இலக்கியத் தலைநகரம்,

கணித மேதை சீனிவாச ராமானுசன் பிறந்ததால் சிறந்த பெருநகரம்.

வெற்றிலைப்பாக்கு வைத்து விருந்தினரைப் போற்றும்
தாம்பூலத் தமிழ்நகரம்.

கங்கையிலும் புனிதமாய காவிரியும் அரசலாறும் சூழ ஈரக்காற்றெடுத்து இதயம் தடவி நிற்கும்
இனிதான நதி நகரம்,

தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என்னும் பண்பாட்டுப்பெயர் கொண்ட மதிநகரம்

தற்போது மாநகராட்சி என்னும் மாண்பு பெற்றுத் திகழும் எழில் நகரம் கும்பகோணம்

அங்கண் வரும்
2027 சனவரித் திங்கள் 03.01.2026 சனிக்கிழமை முதல் 09.01.2026 வெள்ளிக்கிழமை வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும்
இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையின் எழுச்சிமிகு விழா ஏழிசைத் தமிழ்மணக்க ஏழுநாள் நடைபெறவுள்ளது.

புலனழுக்கற்ற இளைய தலைமுறையைப் பொலிவுற உருவாக்கிப் புத்தொளி மிக்க சிந்தனையாளர்களின் வாழ்விடமாய்த் தமிழ்நாட்டை வடிவமைக்க வேண்டும் என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வண்ணக் கனவுகளில் ஒன்று.

அந்தக் கனவு மெய்ப்படப் பல்வேறு தளங்களில் இளைஞர்களை எம் தமிழ் வளர்ச்சித் துறை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி உயர்வித்து வருகிறது.

பூத்திருக்கும் புத்தாண்டில் தமிழ்நாட்டின் முப்பத்தெட்டு மாவட்டங்களில் இருந்தும் இருநூறு கல்லூரி மாணவர்கள் கும்பகோணத்தில் கூடியிருந்து குலவு தமிழ் கேட்டுக் கூர்மை பெற அழைக்கப்பட்டுள்ளார்கள்.

நாடறிந்த நாவலர்கள் நற்றமிழ்ப் பாவலர்கள் பலர் பன்னோக்குப் பார்வையில் பைந்தமிழ்ச்
சீரெடுத்துச் சிறப்புரை வழங்கிச் செந்நெறி புகட்ட வரவுள்ளார்கள்.

கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழும் இம்மேன்மைமிகு நிகழ்வில் பங்கேற்றுப் பயன் துய்க்க வருகை தரும் ஆர்வப் பெருக்குடைய அறிவாண்மைச் சீலர்களாம் மாணவக் கண்மணிகளையும்,

மாண்புறு தமிழை மனங்கொள்ளப் பரிமாறி மலர்விக்க வருகை தரும் மாண்பாளர்களையும் மகரந்தம் சிந்தும் மனத்துடன் வருக!வருக!! என்று வரவேற்று மகிழ்கின்றேன்.

ஒளவை ந.அருள்

இயக்குநர்.
தமிழ் வளர்ச்சித்துறை

பயிற்சி நிரல்

03.01.2026-சனிக்கிழமை

மு.ப. 10.00-10.45

எண்ணிய எண்ணியாங்கு எய்துப

பைந்தமிழ்ச்செல்வி புதுகை ச.பாரதி

செயலாளர், கம்பன் கழகம்

மு.ப. 10.45-11.30

தமிழோடு உறவாடுவோம்

கவிஞர் மானா பாஸ்கரன்
மூத்த ஊடகவியலாளர்

மு.ப. 11.45-12.30

கம்பன் கவிதையின் காதலன்

முனைவர் து.ருக்மணி

முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி

பி.ப. 12.30 -1.15

சங்க இலக்கியம் – கவிதையும் காட்சியும்

கவிஞர் சக்தி ஜோதி

பி.ப 1.15-2.00
தமிழ்த்தொண்டன் பாரதி

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

பாரதி ஆய்வாளர்

பி.ப 4.00-5.30

பாட்டினில் அன்பு செய்க

திருமதி தெய்வானை
பட்டிமன்ற பேச்சாளர்

04.01.2026- ஞாயிற்றுக்கிழமை

மு.ப. 10.00-10.45

நாமணக்கும் நாலாயிரம்
முனைவர் சு.சங்கீதா சொற்பொழிவாளர்

மு.ப. 10.45-11.30

தமிழ் இன்பத்துள் இன்பம்
முனைவர் பொன் கதிரேசன்
கணேசர் கலை அறிவியல் கல்லூரி

மு.ப. 11.45-12.30

மானுடம் போற்றுதும்
கவிஞர் ம.திருவள்ளுவர்
மனிதவள மேமம்பாட்டுப் பயிற்சியாளர்

பி.ப.12.30-1.15

மொழிபெயர்ப்பின் தேவைகள் முனைவர் ஜோ. பிரேமா கிறிஸ்டி கல்வியாளர்

பி.ப 1.15-2.00

தமிழ் சட்டமும் பேசும்

தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா ஆசிரியர். மகாகவி

பி.ப 4.00-5.30

சங்ககால வணிக வரலாற்றில்
சூது பவளம் மணிகள்

முனைவர் ஜா.சலேத்
தூய வளவனார் கல்லூரி

05.01.2026-திங்கட்கிழமை

மு.ப. 10.00-10.45

அறம் செய்ய விரும்பு

தமிழ்ச்சுடர் சுமதிஸ்ரீ சொற்பொழிவாளர்

மு.ப. 10.45-11.30

அயலகத் தமிழ்
முனைவர் எஸ்.ஆரோக்கியராஜ் அயலகத்தமிழ், செஜோங் பல்கலைக்கழகம் கொரியா

மு.ப. 11.45-12.30

இலக்கியங்களில் விருந்தோம்பல் கவிஞர் கா.பா.ராஜ்குமார் எழுத்தாளர்

பி.ப. 12.30 -1.15

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ்

சைபர் சிம்மன்

கௌரவ விரிவுரையாளர்

பி.ப. 1.15-2.00

வெற்றியின் அறிவியல்

திரு திருஞானம்
பயிற்சியாளர்

பி.ப. 4.00 -5.30

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

பேராசிரியர் பா.இரவிக்குமார் இணைப் பேராசிரியர்

06.01.2026-செவ்வாய்க்கிழமை

மு.ப. 10.00-10.45

அறிவியல் தொழில் நுட்பங்களில் மென்பொருள் பயன்பாடுகள்

முனைவர் இகே.தி சிவகுமார் அறிவியல் அறிஞர்

மு.ப. 10.45-11.30

நூலினைப் பகுத்துணர்
திருமதி கார்த்திக் ராஜா
முனைவர் பட்ட ஆய்வாளர்

மு.ப. 11.45-12.30

தொல்காப்பியம் எனும் தொன்மைத்தேன்

முனைவர் தி. சிவக்குமார் மொழிபெயர்ப்பாளர்

பி.ப. 12.30-1.15

முத்தமிழறிஞரும் முத்தமிழும்

பேராசிரியர் ஜே.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
வழக்குரைஞர்

பி.ப. 1.15-2.00

தமிழின்பம் தனியின்பம்

எழுச்சிக்கவிஞர் கங்கை மணிமாறன் சொற்பொழிவாளர்

பி.ப. 4.00-5.30

சங்ககால வாழ்வியல்

நற்றமிழ் நங்கை திருமதி கபிலா விசாலாட்சி
சொற்பொழிவாளர்

07.01.2026-புதன் கிழமை

மு.ப. 10.00-10.45

இனிக்கும் இலக்கணம்

நகைச்சுவை நாவலர்
இரெ.சண்முக வடிவேல்
தலைவர், திருவாரூர் தமிழ்ச் சங்கம்

மு.ப. 10.45 – 11.30

அருந்தமிழ் வளர்த்த ஆன்மீகம்

தமிழ்க்கடல்
தேவகோட்டை இராமநாதன்
வழக்கறிஞர்

மு.ப. 11.45-12.30

தமிழ் உணர்வோடு உறவாடுவோம்

பேராசிரியர் வெ.இன்சுவை ஆய்வியல் நிறைஞர்

பி.ப. 12.30 -1.15

மருந்தாகும் தமிழ்

சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்

இயக்குநர் இம்ப்காப்ஸ்

பி.ப. 1.15-2.00

கவிதை எமக்குத் தொழில்

புரட்சிக்கனல் கவிஞர்
இளைய கம்பன்
திரைப்படப் பாடலாசிரியர்

பி.ப. 4,00-5.30

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

முனைவர் இரா.குணசேகரன் இலக்கிய ஆய்வாளர்

08.01.2026-வியாழக்கிழமை

மு.ப. 10.00-10.45

பெரிதினும் பெரிது கேள்
திரு.ச. பிரின்சு என்னாரெசு பெரியார் வழக்குரைஞர்

மு.ப. 10.45 – 11.30

எண்ணுவது உயர்வு
திருமதி என்.எஸ்.பிரேமா
நகராட்சி நிருவாக மேனாள் இணை இயக்குநர்

மு.ப. 11.45-12.30

எழுத்தும் வாழ்வும்
திருமதி பொற்கொடி செல்வராஜ் ஊடகவியலாளர்

பி.ப. 12.30- 1.15

சிறகை விரி – உயரப்பற திரு.இளஞ்செழியன் லோகநாதன் உறுப்பினர் வெளிநாட்டு முதலீட்டு ஆலோசனைக்குழு

பி.ப. 1.15-2.00

சூழலியலும் சங்க இலக்கியமும் திருமதி அகிலா செழியன்
இணை துணைத் தலைவர்.
ஸ்டார்ட் அப் தமிழ்நாடு

பி.ப. 4.00 – 5.30

ஆசாரக்கோவை உணர்த்தும் வாழ்வியல் நெறிமுறைகள்

முனைவர் ஜே.லொயோலா பீரிஸ் துணை முதல்வர் மற்றும் தேர்வுத்துறை கண்காணிப்பாளர். தமிழ் உயராய்வுத் துறை,
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி

09.01.2026- வெள்ளிக்கிழமை

மு.ப. 10.00-10.45

தொன்மைத் தமிழும் தொல்லியலும்

முனைவர் செ.கணேசமூர்த்தி
சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மு.ப. 10.45-11.30

திரையுலகத்தின் மாண்புகள்

முனைவர் அனிதா சந்தனசாமி

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி

மு.ப. 11.45-12.30

சங்க இலக்கிய நயம்

முனைவர் மணிமாறன்

சரசுவதி மகால் நூலகம்

பி.ப. 12.30-1.15

நடிகர் திலகமும் செந்தமிழும்

முனைவர் ச.லோகேஷ்

ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி

பி.ப. 1.15-2.00

நாடகம் எறும் கலை வடிவம்

முனைவர் மா.கோவிந்தராஜன் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி

பி.ப. 4.00 – 5.30

புறநாநூறு கூறும் செய்தி

முனைவர் த.சுவாமிநாதன்
அரசினர் கலைக்கல்லூரி

கலைநிகழ்ச்சிகள்

03.01.2026 முதல் 09.01.2026 –
பி.ப. 6.00 – 8.00

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *