Arul.2009/FB/#6830
அகத்திலும் குளிர்வித்த அற்புத அருவி
வட்டமாக வளைந்த சுவர் வரிசைச் செங்கல்
வளமையுடன் கலைபேசப் பார்த்து நின்றோம்!
திட்டத்துடன் நண்பர்திரு பெருமாள் எம்மைத்
தேடிவந்து கூட்டிச்செல்லப் பெருமை கொண்டோம்!
கட்டழகு சிகரமெனக் கருதும் வண்ணம்
காட்சிதரும் அற்புதத்தைக் கண்டே நின்றோம்!
மட்டில்லா மகிழ்ச்சியினைத் தந்தே நின்ற
மாநகர நீர்வீழ்ச்சி வாழ்க வென்றோம்!
ஈராயி ரத்திருபத் தேநான் காண்டின்
இனிமையுறும் கடைமாதப் பதினா றன்றே
சீரினிலே திகழ்கின்ற ஹூஸ்டன் சென்று
சிலிர்ப்புடனே இவ்வனப்பைக் கண்டு நின்றோம்!
ஆரவாரம் செய்திடும்அவ் அருவி தன்னின்
அறுபத்து நான்கடியாம் உயரம் கண்டோம்!
பாரிதனில் பெருமாளும் யாமும் போயப்
பரவசத்தி லந்நீரில் நனைந்து நின்றோம்!

Add a Comment