Arul.2009/FB/#6767
உலகுக்குத் தந்து பெரும்புகழ் கொண்ட சிற்றூருக்குச் சென்று வந்தேன்
காவிரி போல் கருநாடக மாநிலத்தில் தோன்றித் தென்பெண்ணை என்னும் பேராறு, கெடிலம் என்னும் சிற்றாறுடன் சேர்ந்து வாழ்விக்கும் வரலாற்றுப் புகழ் மிகுந்தது விழுப்புரம் மாவட்டம்.
காடவச் சிற்றரசனாகிய கோப்பெருஞ்சிங்கன், பிற்காலச் சோழர்களின் வழித்தோன்றலான மூன்றாம் இராசராசனைச் சிறை செய்த வரலாற்றுக்கு உரிய மாவட்டம் அது.
கெடில நாகரிகம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது.
அங்குத் தமிழ்க் கடவுளாம் முருகனின் புகழ் பரப்பும் மயிலம் வட்டத்தில் தமிழ்ப்பெருமாட்டி அவ்வையின் திருப்பெயரில் அமைந்த குப்பம் என்று போற்றப்படும் ஊரின் சிறப்பாகும்.
உரைவேந்தர் எனப் பார் புகழ் கொண்ட என் பாட்டனார் பேருரை கண்ட பெருஞ்செல்வர், சித்தாந்தக் கலாநிதி ஔவை துரைசாமி(5.9.1903) அவர்கள் பிறந்த ஊரும் அவ்வண்ணமே நாவேந்தர் என நானிலம் போற்றும் எந்தையார் சிவபாதசேகரன் என்கிற பத்மஸ்ரீ ஔவை நடராசன்(24.4.1935) அவர்கள் பிறந்த ஊரான ஔவையார் குப்பத்திற்கு 18.9.25 வியாழக்கிழமை மதியம் சென்று மண்ணைத் தொட்டு வணங்கி உவகையடைந்தேன்.

Add a Comment