POST: 2025-10-18T11:35:30+05:30

Arul.2009/FB/#6755

எங்கும் திருக்குறள்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.24 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் தொடங்கப்பெற்று ஆண்டுக்கு 30 வாரங்கள் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

திருக்குறள் திருப்பணிகள் திட்டத்திற்குச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.8.25 புதன்கிழமையன்று
திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ..ப.,
சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில்
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முன்னிலையில்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பணிகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,

திருமதி ஜெ. ஹஸ்ரத்
பேகம்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர்,

திருமதி செ. வேதவல்லி , உதவிக் கல்வி அலுவலர், பெருநகரச் சென்னை மாநகராட்சி.

திருமதி இர. ஹேமலதா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், சென்னை.

முனைவர் கு. மோகனராசு, தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதாளர்.

கலைமாமணி முனைவர் ந. முருகன் (சேயோன்), தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதாளர்.

வழக்கறிஞர் திருக்குறள் தாமோதரன் , ஒருங்கிணைப்பாளர் திரு.வி.க பேச்சுப் பயிலரங்கம்

முனைவர் கஸ்தூரிராஜா,
தலைவர், உலகத் திருக்குறள் பேரவை, சென்னைக் கிளை .

முனைவர் கலைசெழியன், செயலாளர்,
உலகத் திருக்குறள்
பேரவை ,
சென்னைக் கிளை.

திருமதி. ஏ. சத்திய பாமா, மாவட்டக் கல்வி அலுவலர், தென் சென்னை.

தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு விருதாளர் திரு அ. மதிவாணன்

திருமதி க.பவானி , தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,

திரு எ.பழனி , உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

திருமதி வே. சாந்தி ,
உதவி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

மற்றும் பலர்
பங்கு கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *