WhatsApp Image 2025-05-27 at 09.40.41_273662be

கி.வா.ஜ சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா – 2025

சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் மே மாதம் 25ஆம் தேதி (25-5-2025) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும். கி.வா.ஜ. குடும்பத்தினர் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

முனைவர் அவ்வை ந. அருள் (இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை) தலைமை தாங்கிப் பரிசுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.
திரு கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள்
(கலைமகள் – ஆசிரியர்)
அறிமுக உரையாற்றுகிறார்கள்.
பிரபல மருத்துவர்
திருமதி பிரியா இராமசந்திரன் அவர்கள் “புராணக் கதைகள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்கள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
விருந்தினர்களைக் கௌரவித்தல்: திரு குமார் (கி.வா.ஜ. அவர்களின் புதல்வர்) திருமதி உமா பாலசுப்பிரமணியம் (கி.வா.ஜ அவர்களின் புதல்வி)
பேராசிரியர் கே.ஜி.ரகுநாதன் அவர்கள் (சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன்) வரவேற்புரை ஆற்ற உள்ளார்கள்.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்கள்,
முனைவர் கரு. நாகராஜன் அவர்கள், [தமிழ்ப் பேராயத்தின் (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்) தலைவர்]
திரு ஆர். வெங்கடேஷ் அவர்கள் (தினமலர் – பட்டம் இதழ் ஆசிரியர்)
مالو
ஆகிய மூவருக்கும் சிறந்த சிறுகதைகளுக்கான கி.வா.ஜ. சிறுகதைப் போட்டி விருது வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் எழுத்தாளர் திரு கே.ஜி. ஜவகர் அவர்களின் புல்புல்தாரா இசையும் உண்டு. இணைப்புரை: கலைமாமணி சி.வி.சந்திரமோகன்.
தாங்கள் அவசியம் விழாவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
நன்றியுடன்,
பி.டி.டி. ராஜன், பதிப்பாளர் – கலைமகள்
இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *