ஒளவையின் தமிழமுது

தினமணி

பக்கம் எண் : 15

10.02.2025

ஒளவையின் தமிழமுது-
ஒளவை அருள்;
பக். 390;
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்; சென்னை-18;
044-43418700.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை முன்னாள் செயலர் ஒளவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய
அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல்.

தமிழ் இலக்கண இலக்கிய மரபில் நூலின் புறத்துறுப்பாகக் கருதப்படும் பாயிரம். முன்னுரை, அணிந்துரைகளுக்கு
இன்றியமையாத இடம் உண்டு எனக் கூறும் நூலின் தொகுப்பாசிரியர், தன் தந்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு முன்னுரைகளையும், அணிந்துரைகளையும் எழுதியிருப்பதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 125 அணிந்துரைகள், முன்னுரைகளின் திரட்டு ஔவையின் தமிழமுதாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியக் கட்டுரைகள், கவிதை நூல்கள் ஆய்வு நூல்கள், ஆன்மிக நூல்கள் எனப் பல்வேறு வகை நூல்களுக்கு எழுதப்பட்ட
அணிந்துரைகள் கூர்மையாகவும், சிறந்த வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.

தொடர்புடைய நூல்களை வாசிக்கவும் தூண்டுகின்றன.

ஒவ்வொரு நூலின் உள்ளடக்கத்தையும் அதன் அணிந்துரையோ-முன்னுரையோ தெளிவாகச் சொல்லிவிடும்; அதேவேளையில் அந்த நூலை ஆழ்ந்து முழுமையாகப் படித்தால்தான் அணிந்துரை எழுத முடியும் என்ற அடிப்படையில், ஒனவை நடராசனின் ஆர்வமும் உழைப்பும் நமக்குப் பிரமிப்பைத் தருகின்றன.

அணிந்துரைகளின் தொகுப்பைக் கொண்டே ஒரு நூலை உருவாக்கியிருப்பது வித்தியாசமான சிந்தனை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *