POST: 2024-12-08T08:02:35+05:30

சிரேணிக காவியம் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

சிரேணிகன் கேட்காத கேள்வியில்லை சேலினி நோற்காத நோன்புமில்லை எனும் வரிகளுக்கு சொந்தக்காரன் மாமன்னன் சிரேணிக ராஜனின் வரலாறு, இனிய தமிழில் வசனக் கவிதையில்…

நாள் :

8.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை

இடம் :

இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி (வடக்கு) இன்போசிஸ் ஹால்,

வடக்கு உஸ்மான் சாலை (விவேக் & கோ அருகில்) தி.நகர், சென்னை – 600 017.

அன்புடையீர், வணக்கம்,

வரலாற்று நாயகர் வர்த்தமான மஹாவீரர் காலத்தில் வாழ்ந்த பேரரசன் சிரேணிகனின் சரிதம், கவிஞர் தங்கசாராவின் கைவண்ணத்தில் இதுவரை தமிழ்ச் சமணம் கண்டிராத வசன கவிதையில், எளிய நடையில், இனிய தமிழில் வெளிவரவிருக்கும் சிரேணிக காவியம் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கவிஞரை வாழ்த்திட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிர்வாகிகள், சமணத் தமிழ்ச் சங்கம்

காலை 9.30 மணி : குத்து விளக்கேற்றுதல்

காலை 9.35 மணி :

இறை வணக்கம்

செல்வி. சுதஞ்ணா தீபக்குமார்

காலை 9.40 மணி :

மாவீரன் மகாவீரன் இசைப்பாடல்

செல்வி. சாதனா வருண்குமார்

காலை 10.00 மணி :

வரவேற்புரை முனைவர் அ. ரமேஷ் அவர்கள்

காலை 10.15 மணி கவியரங்கம்

பொதுத் தலைப்பு : கொஞ்சும் சந்தங்கள்

தலைமை : கவிவித்தகர் பொற்கைப் பாண்டியன் நிறுவனர், பொற்கைப் பாண்டியன் கவிதா மண்டலம், மதுரை

சந்தம்பாடும் கவிஞர்கள்

வாழ்க்கைத் தமிழ் : தமிழ்ச்செம்மல் ஜெ.வா. கருப்புசாமி, நிறுவனர் சும்மாடு

சங்கத்தமிழ் : கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன். தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரை

சமயத் தமிழ் : புலவர். ஆ.காளியப்பன் தலைவர், தொல்காப்பிய தமிழ்ச்சங்கமம், பேருராதீனம்

வஞ்சித் தமிழ் : முத்தமிழ் வித்தகர் முத்து முருகன், தலைவர், பொ.பா.க.மண்டலம், விருதுநகர்

குரவைத் தமிழ் : சொல்வேந்தர் சுரேசு இராமலிங்கம் செயலர், பொ.பா.க.மண்டலம், விருதுநகர்

கும்மித்தமிழ் : கவிஞர் ஈசுவரராசா பொதுச்செயலாளர், பொ.பா.க.மண்டலம், மதுரை

காலை 11.00 மணி : நூல் வெளியீடு

தலைமை & நூல் வெளியீடு

: மாண்பமை நீதியரசர் தா.பரத சக்ரவர்த்தி அவர்கள் நீதிபதி. சென்னை உயர்நீதி மன்றம்

வாழ்த்துரை

: முனைவர் அவ்வை ந.அருள் அவர்கள்

இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *