POST: 2024-04-29T08:43:15+05:30

எங்கும் தமிழ்!

எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ்க் கவிஞர் நாள் 2024-2025

பாவேந்தர் பாரதிதாசன்
133ஆம் பிறந்தநாள்

அழைப்பிதழ்

29.04.2024 திங்கள் கிழமை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை.

தமிழ்சால் பெருந்தகையீர்!

வணக்கம்.

செந்தமிழ் மணக்கும் பெரும் பெயர் மதுரையில் சித்தம் இனிக்கும் பாவேந்தரின் பிறந்த நாள் பெருமங்கலம் காணும் திருவிழா!

தமிழ்க் கவிஞர்கள் திருநாள் என்று தமிழ்நாட்டரசு உச்சிமேல் வைத்து மெச்சிப் பாராட்டும் தன்மானத் தமிழ்விழா!

நாவலரும் பாவலரும் நயந்தேத்தும் நயனுடையார் பூரிப்போடு புத்துலகச் சிற்பி புரட்சிக்கவிஞரின் புகழ் போற்றிப் பரவும் பெருவிழா!

தேனாட்சி செய்யும் தீந்தமிழைத் தானாட்சி செய்த தமிழ்ப் பெருங்கவிஞருக்குப் பாண்டியக் கோனாட்சி செய்த மாட மதுரையில் மாட்சிப் பெருவிழா!

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிந்து உயிர்க்க. அந்தத் தமிழ்த்திருநாள் முழுவதும் நான்மாடக் கூடலில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திற்குத் தமிழார்வலர்கள் வாருங்கள்! செந்தமிழ்த் தீந்தேன் பருகுங்கள்!

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே!

-பாவேந்தர் பாரதிதாசன்

நிகழ்ச்சி நிரல்

கலைநிகழ்ச்சி

முற்பகல் 9.30 – 10.30

பாட்டரங்கம்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும்

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

தொடக்க விழா

முற்பகல் 10.30- 11.00

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

: முனைவர் ம.சுசிலா
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ).
மதுரை மாவட்டம்

நோக்கவுரை :
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர்.
தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை

தலைமையுரை :

திருமதி மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர், மதுரை.

பட்டிமன்றம் : முற்பகல் 11.001230

நடுவர்
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

தலைப்பு

: பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது
தமிழ் உணர்வே!
சமுதாய உயர்வே!

தமிழ் உணர்வே!

முனைவர் ந.விஜயசுந்தரி

செல்வி கு.ஜெ.ஹேமாவதி

சமுதாய உணர்வே !

முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி

செல்வன் செ.பாலு ஆனந்த்

: முற்பகல் 12:30 – 1.30

கருத்தரங்கம்

தலைமை
: புலவர் செந்தலை ந.கவுதமன்

: பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்

பொருள் – உரை நிகழ்த்துவோர்

அழகியல் களம் –
கவிஞர் இந்திரன்

பாரதி நட்புக் களம் –
கவிஞர் நா.வே.அருள்

இளையோர் இலக்கியக் களம் – முனைவர் யாழ்.சு.சந்திரா

பெண்ணுரிமைக் களம் – முனைவர் சு.சோமசுந்தரி

இசையரங்கம் :
பிற்பகல் 2.30- 3.30

பாட்டு : கிராமத்துக் குயில் முனைவர் ஆ.சந்திரபுஷ்பம்

தவில் : இசைத் தியாகவேல் முத்தரசு

கவியரங்கம் : பிற்பகல் 3.30-430

தலைமை : கவிஞர் நெல்லை ஜெயந்தா

தலைப்பு:
பாவேந்தரின் பார்வைகள்

பாடுபொருள் – பாடுவார்

உடைமை மக்களுக்குப் பொது – கவிஞர் கண்ணதாசன்

மானிடச் சமுத்திரம் நானென்று கூவு _
கவிஞர் மூரா

உலகம் உண்ண உண் –
கவிஞர் மா.காளிதாஸ்

விசாலப் பார்வையால் விழுங்கு – கவிஞர் பா.மகாலெட்சுமி

நிறைவுரை :
மருத்துவர் ச.கு.பாலமுருகன் தலைவர்.
குரு மருத்துவமனை. மதுரை

நன்றியுரை :
திருமதி கு.ப.சத்தியபிரியா துணை இயக்குநர் (நிரு) (பொ). தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை

நாட்டுப்பண்

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ்

இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

-பாவேந்தர் பாரதிதாசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *