POST: 2024-03-16T09:40:42+05:30

மாணவர் மன்றம், சென்னை.

41,இப்ராகிம் தெரு, சென்னை 600 001

93ஆம் ஆண்டு விழா

தமிழ்ச் சான்றோர் படம் திறத்தல், தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், ஆகிய நிகழ்வுகளின்

அழைப்பிதழ்

16.03.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

நீராறும் கடலுடுத்த…..

வரவேற்புரை

முனைவர் வி. சீ. கமலக்கண்ணன் மன்றச் செயலாளர்

ஆண்டறிக்கை படித்தல் :

முனைவர் பொன். இளங்கோவன் மன்ற இணைச் செயலாளர்

விழாத் தலைமை உரை:

புலவர் ப. இ. பொன்னுசாமி மன்றத் தலைவர்

திருவுருவப் படங்களைத் திறந்து வைத்தல் – விருது வழங்குதல்

நீதியரசர் இரா.சுரேஷ்குமார் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றம்.

விருது பெறுபவர்களை அறிமுகம் செய்தல்

புலவர் சீனி சோமசுந்தரம் மன்ற இணைச் செயலர்

விருது பெற்றவர்களைப் : பாராட்டுதல்

முனைவர் ந. அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

சிறப்புரை :

முனைவர் ப. மகாலிங்கம் அவர்கள்
மொழிகள் புல முதல்வர் வேய்ஸ் பல்கலைக்கழகம்.

விருது பெற்றவர்கள் சார்பாக ஏற்புரை :

முனைவர் பா. தாமோதரன் நிறுவுநர், திரு.வி. க. பேச்சுப் பயிலரங்கம்

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துரை வழங்குதல்:

புலவர் த. இராலிங்கம் அரிமா முனைவர் த. கு. திவாகரன் மன்றத் துணைத்தலைவர்கள்

நன்றி நவிலல்

புலவர் வே. பக்தவச்சலம் மன்றப் பொருளாளர்

அன்புடையீர், வணக்கம்.

சென்னை மாணவர் மன்றத்தின் 93-ஆம் ஆண்டு விழா திருவள்ளுவர் ஆண்டு – 2055, பங்குனித் திங்கள் 3-ஆம் நாளன்று (16.03.2024) சனிக்கிழமை 10.00 மணிக்கு, மாணவர் மன்ற மயிலை சிவமுத்து நிலையத்தில் (41, இப்ராகிம் தெரு, சென்னை – 1) நடைபெறும்.

அவ்விழாவில், தமிழறிஞர் ஔவை நடராசன், மாணவர் மன்ற இணைச் செயலாளர் புலவர் சா. நித்தியானந்தன், செயற்குழு உறுப்பினர்கள் புலவர் கா. ச. அசேந்திரன், புலவர் பா. சிவராமன் ஆகியவர்களின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்படும்.

மாணவர் மன்றத் தலைவர் புலவர் ப. கி. பொன்னுசாமி அவர்களுக்கு 2022ஆம் ஆண்டுக்குரிய தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை, ‘தமிழ்ச் செம்மல்’ விருதுடன் பரிசுத்தொகை ரூ. 25,000/- வழங்கியது. மன்றத் தலைவர் தனக்கு வழங்கிய அப்பரிசுத்தொகை ரூ.25,000/-த்தை மன்ற அறக்கட்டளை வைப்புநிதியாக வழங்குதல்.

மாணவர் மன்றத் தலைவர்

புலவர் ப. கி. பொன்னுசாமி அவர்கள்

விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரை ஆற்றுவார்.

மாண்புமிகு நீதியரசர்

இரா, சுரேஷ்குமார் அவர்கள்

சென்னை உயர்நீதி மன்றம்

தமிழறிஞர்கள் நால்வரின் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்தும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கியும் புகழுரை ஆற்றுவார்.

முனைவர் ந. அருள் அவர்கள்,

இயக்குநர், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை. விருது பெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்குவார்.

முனைவர் ப. மகாலிங்கம் அவர்கள்,

(மேனாள் தமிழ்த்துறைத்தலைவர், மாநிலக் கல்லூரி, சென்னை) மொழிகள் புல முதல்வர், வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை. மன்றம் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிச் சிறப்புரை ஆற்றுவார்.

மன்றத் துணைத்தலைவர்கள்

புலவர் த. இராமலிங்கம், அரிமா முனைவர் த. கு. திவாகரன்

ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

விருது பெறுவோர்

முனைவர் பா. தாமோதரன் அவர்களுக்கு, ‘திருக்குறள் செம்மல்’ என்னும் விருதினையும்,

புலவர் தி. வே. விஜயலக்குமி அவர்களுக்கு, ‘செந்தமிழ்ச்செம்மல்’ என்னும் விருதினையும், வழங்கிப் பாராட்டுகின்றோம்.

உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி முதல்வர்

முதல்வர் செல்வி அ. சந்திரா அவர்களுக்கு ‘ஆசிரிய மணி’ என்னும் விருதினை வழங்குகிறோம்.

மன்ற செயற்குழு உறுப்பினர் புலவர் செ.பொன்னம்பலம் அவர்களுக்குத் ‘தமிழ்ச்சீர் பரவுவார்’ என்னும் விருதும்,

மன்றச் செயற்குழு உறுப்பினர் முனைவர் சோ. கருப்பசாமி அவர்களுக்கு ‘இலக்கியச் செம்மல்’ என்னும் விருதும் வழங்கிப் பாராட்டுகிறோம்.

விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க

அன்புடன் அழைக்கின்றோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *