POST: 2023-12-03T06:05:28+05:30

எந்தையார் ஒளவை நடராசன் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 91ஆம் பிறந்த நாள் (2.12.2023) இல்லம் சென்று வாழ்த்துப் பெற்றேன்..

பெருமிதம் நாளும் வெல்க !

பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார்
ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து
தன்மான இயக்கத்தையும் ,
திராவிடர் கழகத்தையும்
கண் போலக் காப்பவர்
தலைவர் வீரமணி .

அல்லும் பகலும் அயராமல்
இனமான எழுச்சி உரைகளையும்
நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்றி ,
இருண்டு கிடக்கும் திராவிடர் சமுதாயத்தை
அங்குலம் அங்குலமாக உயர்த்தி வருபவர்
ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் .

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

என்ற திருக்குறள் வாழ்வு
ஆசிரியர் திலகத்தின்
பெருமித வாழ்வு !

பல்லாண்டு வாழ்க !!

வாழ்க தமிழ் –
வெல்க பெரியாரியம் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *