POST: 2023-11-10T07:29:44+05:30

நல்லிதய செம்மல் நல்லி செட்டியார்

நாடறிந்த பெருந்தகையும் – நல்லவர் நெஞ்சிலெல்லாம்
புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம் ,ஆடல் ,ஆவணம் ,மொழியாக்கம் ,தேசியம் ,
தெய்விகம் ,பாரதியம் , உடல்நலம் ,வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த பெருமிதம் கொண்டவரும் கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் பழுத்த சிந்தனையும் ,எழுத்து வன்மையும் ஒரு சேரக் கொண்டவர் .

உள்ளத்தில் பட்டதை – உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற்றம் தரும் கருத்துக்களை ,சிந்தனைக்குரிய செய்திகளைத் தொகுத்து, நம் முன்னால் நின்று தொட்டுப் பேசும் பரிவு கொண்டவராவார்.

பிறந்த நாள் விழாக் காணும் அருமை நல்லி செட்டியார் மேலும் ஆயிரம் பிறை காணும் அழகுக்கு அணிகலனாக இந்த மூன்று நூல்களும் இந்தப் பொன்னாளில் (9.11.23) பதிப்பு முகம் காண்கிறது .

உடுப்பதும் , உரைப்பதும் , நடப்பதும்
பால் வெண்மைப் பளிங்காக உலா வரும் நல்லி செட்டியார் பழந்தமிழ் வள்ளல் நள்ளியை நமக்கு நினைவூட்டுகிறார் .

அரிய புதிய நூல்களைப் பற்றி பார்த்தீர்களா ? என்று விழாக்களில்
எந்தையார் கேட்டால் ? உடனே அந்நூலை இரண்டு படிகள் வாங்கி அப்பாவுக்கும் – அவர் படித்து மகிழும் நூலகத்துக்கும் ஒரு படி வாங்கி அனுப்பும் கல்வி மனம் அவருக்கு எப்போதும் உண்டு .

உரையாடலாக தம் கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் திறம் பத்மஸ்ரீ நல்லி செட்டியாரின் தனிப் பாங்காகும்.

பரிவின் பிழம்பாகிய பத்மஸ்ரீ நல்லி செட்டியார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க !

இவருக்கா எண்பத்து நான்கு எவர் நம்புவது !

எல்லோரும் இப்படித்தான் கேட்பார்கள் .
இளமைக்கு இளமையும் , தலைமைக்குத் தலைமையும், தகுதிக்குத் தகுதியும் ,
ஒருங்கே பெற்றவராவார்

வாழ்க நல்லியார்

BRAHMA GANA SABHA
Brahma Gana Sabha ( Regd.)
Chennai – 600004.

Cordially invite you to the
BOOK RELEASE FUNCTION

marking the

84 th BIRTHDAY CELEBRATION
of Padma Shri Dr. Nalli Kuppuswami Chettiar

Day & Date: Thursday, 9th November 2023
Time: 6.30 p.m.

Venue: Kumararajah Muthiah Hall ( Chettinad Vidyashram )
Raja Annamalai Puram, Chennai – 600028.

நல்லிதய நல்லி
சித்தர் ஞானம்
நலம் வாழ…

PROGRAMME

Prayer

Welcome Address

Padma Shri Dr. Nalli Kuppuswami Chettiar

Release of the Books, Presidential Address & presenting of Nalli THISAI ETTUM TRANSLATION Awards

Dr. N.Arul
Director, Tamil Development Department,
Govt. of Tamil Nadu, Chennai.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *