POST: 2023-10-06T10:00:39+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
வேலூர் மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 18,19
05.10.2023, 06.10.2023
வியாழன், வெள்ளி
இடம்: முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, வேலூர்

பெருந்தகையீர் வணக்கம்.
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
வேலூர் மாநகரில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா!

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!

வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!

கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து இருநாள்கள் முழுவதும்
ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள்!

முனைவர் ஔவை ந.அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ் வளர்ச்சித் துறை
வேலூர் மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
2023 2024

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 18
முதல் நாள்: 05.10.2023, வியாழக்கிழமை

முற்பகல் 10.00 ; வருகைப்பதிவு
முற்பகல் 10.20 ; தமிழ்த்தாய் வாழ்த்து

முற்பகல் 10.25 – 11.15 : வரவேற்புரை
முனைவர் ப. நாகராசன்
மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், சிவகங்கை
மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்(மு.கூ.பொ), வேலூர்

தொடக்கவுரை:
முனைவர் ஒளவை ந. அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை

தலைமையுரை:
திருமதி த. மாலதி
மாவட்ட வருவாய் அலுவலர், வேலூர்

முற்பகல் 11.15 – 12.00
முத்தமிழறிஞர் கலைஞர் நிகழ்த்திய
செம்மொழிச் செயற்பாடுகள் :
செந்தமிழ்ச்செல்வர் நெ.இரா.சந்திரன்

முற்பகல் 12.00 – 12.15 : தேநீர் இடைவேளை

நண்பகல் 12.15 – 01.30:
ஆட்சிமொழி வரலாறு / சட்டம்:
புலவர் கா.காளிராசா

பிற்பகல் 01.30 – 02.30: உணவு இடைவேளை

பிற்பகல் 02.30 – 03.30:
அலுவலகக் குறிப்புகள், வரைவுகள்,
செயல்முறை ஆணைகள் தயாரித்தல்:
முனைவர் சி.பசுபதி

பிற்பகல் 03.30 – 03.45: தேநீர் இடைவேளை

பிற்பகல் 03.45 – 04.45
ஆட்சிமொழிச் செயலாக்கம் /
அரசாணைகள் :
கவிஞர் மெ.செயம்கொண்டான்

பிற்பகல் 04.45 – 05.45
ஆட்சிமொழி ஆய்வும்
குறைகளைவு நடவடிக்கைகளும்:
முனைவர் ப. நாகராசன்
மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர், சிவகங்கை
மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்(மு.கூ.பொ), வேலூர்

தமிழ் வளர்ச்சித் துறை
வேலூர் மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
2023 2024

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 19
இரண்டாம் நாள்: 06.10.2023, வெள்ளிக்கிழமை

முற்பகல் 10.00 – 10.30: வருகைப்பதிவு

முற்பகல் 10.30 – 11.15
முத்தமிழறிஞர் கலைஞரின் சமுதாயச்
சிந்தனைகள்:
முனைவர் பா.சம்பத்குமார்

முற்பகல் 11.15 – 11.30 : தேநீர் இடைவேளை

முற்பகல் 11.30 – 12.30
மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம்;
முனைவர் பொன்.செல்வகுமார்

பிற்பகல் 12.30 – 01.30
மொழிப்பயிற்சி :
முனைவர் தமிழ். திருமால்

பிற்பகல் 01.30 – 02.15: உணவு இடைவேளை

பிற்பகல் 02.15 – 03.00
கணினித்தமிழ்:
எழுத்தோவியன் திரு.நாணா (நாராயணன்)

பிற்பகல் 03.00 – 03.15 : பங்கேற்றோர் கருத்துரை / விளக்கம்
பிற்பகல் 03.15 – 03.30: தேநீர் இடைவேளை

தனித்தியங்கும் தன்மை தமிழினுக்குண்டு
தமிழே ஞாலத்தின் தாய்மொழி பண்டு.
– பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் வளர்ச்சித் துறை
வேலூர் மாவட்டம்
ஆட்சிமொழிக் கருத்தரங்கம்
2023 2024

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 19
நாள்: 06.10.2023, வெள்ளிக்கிழமை

பிற்பகல் 03.30 : தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் ப.நாகராசன்
மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர், சிவகங்கை
மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்(மு.கூ.பொ), வேலூர்

தலைமையுரை:
திரு பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்
வேலூர்

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க சிறப்புரை:
முனைவர் ஔவை ந. அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
சென்னை

கருத்துரையாளர்கள்:
– புலவர் வே. பதுமனார்
– பேராசிரியர் முனைவர் அ. மலர்
– கவிஞர் த. அன்பு
– முனைவர் இரா. பிரபாகரன்
– செல்வி அ. மோனிசா

நன்றியுரை :
திரு. அ. சுகுமார்
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
வேலூர்

நாட்டுப்பண்

“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப்
பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள
மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே
உள்ளது வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”

– முத்தமிழறிஞர் கலைஞர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *