அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 122
அன்பே சிவம்! பண்பே தவம்!
முனைவர் ஔவை அருள்,
1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-
THREE GREAT TRUTHS…
FROM THE FIRST GREAT TRUTH IT FOLLOWS
:
That in spite of appearances, all things are definitely moving together for good; that all
circumstances, however untoward they may seem, are in reality exactly what is needed; that everything around us tends, not to hinder us, but to help us, If only it is understood.
FROM THE SECOND GREAT TRUTH IT FOLLOWS:
a. That the true man is a spirit, and that the body is only an appendage.
b. That what we commonly call his life is only one day in his true and larger life.
c. That death is a matter of far less importance than is usually supposed since it is not the end of life, but merely the passage from one stage to another.
d. That man has an immense evolution behind him and before him, the study of which is fascinating, interesting and instructive.
e. That there is a certainty of final attainment for every human being no matter how far he may seem to have strayed from the path of evolution.
FROM THE THIRD GREAT TRUTH IT FOLLOWS:
That every thought word and action produces its definite result, not a reward or a punishment im posed from without, but the result inherent in the action itself definitely connected with its twin in fluences of cause and effect, these being the two inseparable parts of one whole.
தென்னாப்பிரிக்க தமிழ் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் திரு. ஜி. சதயன் அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“The President, Officials and Members of the Tamil Advancement Society of Chatsworth, take great pleasure in congratulating the Merebank Tamil School Society on this occasion of their Golden Jubilee Celebrations.
From very humble beginnings the Merebank Tamil School Society has grown from strength to strength to become a household name not only in Merebank but the entire country.
It is said that the success of any organisation lies in the solid foundation laid by dedicated and devoted men and women with foresight and clear vision.
In this respect, the Merebank Tamil School Society is blessed to have had men and women of great wisdom and dedication.
They were undoubtedly great personalities, who despite the many challenges they faced in the land of their adoption and as victims of unjust laws and regulations, made personal sacrifices to establish a successful organisation and build a beautiful monument to Tamil aspirations and achievements.
We of the Tamil Advancement Society salute these Sons and Daughters of Tamil who have done so much for the propagation, promotion and preservation of Tamil Language, Culture and Religion. Nanril- and Vanakkam!”
கிளேர்வுட் தமிழ் நிறுவனத்தின் தலைவர் திரு. நித்தியானந்தன் நாயுடு அவர்களின் வாழ்த்துச் செய்தி:-
“It is with a warm glowing sense of pride and pleasure that offer love, greetings and congratulations on behalf of the Clairwood Tamil Institute, to the well known Merebank Tamil School Society on reaching the glorious milestone of 50 years.
Those who have worked on a voluntary basis in the cultural field will know the experience – of problems, difficulties, struggles, frustrations and even lack of appreciation not to say anything about frequent criticisms and suspicions.
To do voluntary community work in an unrewarding climate and plod on relentlessly in the face of odds is an amazing achievement.
But dedication, sincerity of purpose and total honesty must bring in rewards and successes.
The Merebank Tamil School Society deserves the highest praise and congratulations many times over.
The original dreamers, founders, pioneers and stalwarts pursued their goals with painstaking sacrifice and have won their well deserved success.
Their beautiful, well-appointed and impressive buildings which serve as the headquarters stand as the symbol of a life-time’s dedication and foil for a community’s culture.
By their striving, these stalwarts have established a priceless legacy for the future- and for posterity.
We anticipate that from now on waves of pulsating vibrations will flow from this Temple of Culture and Learning.
We offer our prayers and best wishes.
“Aribe Sivam. Sivame Anbu.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின்
‘ஔவையும் புலமையும்’ – (46)
இடைக்காடனார் (42)
உ.வே.சா.: இடைக்காடு என்னும் ஊரிலுள்ளவராதலின் இவர் இப்பெயர் பெற்றார்.
இடைக்காடு என்பது பட்டுக்கோட்டைத் தாலுகாவில் உள்ளது.
இவர் சாதியில் இடையர்.
+ ஔவை: இடைக்காடன் என்பது இயற்பெயர்.
இடைக்குன்றூர் கிழார் (76)
உ.வே.சா.: பெயர் ஊரான் வந்தது.
+ஒளவை: இவர் வேளாளர்; தலையாலங்கானத்துப் போர் நிகழ்ச்சியை நேரிற் கண்டுரைக்கும் சான்றோருள் இவர் சிறந்தவர் என்பது மிகையாகாது.
இரும்பிடர்த்தலையார் (3)
+ஔவை: சோழன் கரிகாலனுக்கு அம்மான் எனக் கூறுவர்.
இவர் யானையின் பெரிய கழுத்தை இப்பாட்டின்கண் இரும்பிடர்த்தலையென்று சிறப்பித்தது பற்றி, இரும்பிடர்த்தலையார் என இவர் பெயர் பெற்றார்.
இவரது இயற்பெயர் தெரிந்திலது. இவர்பால் கரிகாலன் இளமையில் கல்வி கற்றுச் சிறப்புற்றானென்று முன்றுரையரையனார் கூறுவர்.
உலோச்சனார் (258)
உ.வே.சா.: உலோச் என்பது சைனர்கள் செய்து கொள்ளும் ஒரு கிரியை; அதனால் இவர் சைனர் என்று கொள்ளுதற்கு இடமுண்டு.
+ஒளவை: சோழநாட்டுச் சான்றோர்களுள் இவரும் ஒருவர்.
இவர் பெயர் உவோச்சனார் என்றும் காணப்படுகிறது.
இவர் நெய்தல் நிலக் கருப்பொருள் நுணுகி நோக்கி இனிமை எனக் கூறுவதால் இவர் நெய்தல் நிலத்தவராவார்.
அவர் சோழநாட்டு நெய்தல் நிலத்தூர்களுள் பொறையாறு என்னும் ஊரையும் அங்கிருந்து ஆட்சி புரிந்த தலைவனாகிய பெரியன் என்பவனையும் சிறப்பித்துப் “பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் பரியுடை நற்றேர்ப் பெரியன்” (அகம்100) என்றும், “நற்றேர்ப் பெரியன் கட்கமழ் பொறையாறு” (நற்றிணை 131) என்றும் பாடியுள்ளார்.
கண்பவாயில் என்னும் ஊரை இவர் குறித்திருக்கும் நலம் கண்ட நற்றிணை உரைகாரர் (38) இதுவே இவரது ஊராகவும் இருக்கலாம் என்று கருதுவர்.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (241)
உ.வே.சா: இவர் அந்தணர்
=+ஒளவை: முடமோசியார் என்னும் சான்றோர் ஏணிச்சேரி என்னும் ஊரினர்.
இவர் உறையூரில் தங்கி இருந்தமையால் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனப்படுகிறார்.
உறையூர் மருத்துவன் தாமோதனார் (321)
உ.வே.சா.: மருத்துவர்; மருத்துவ நூலில் வல்லவர் – வைத்தியர். தாமோதரனார் என்பது தெய்வத்தால் வந்த பெயர். இதனால் இவர் குடும்பத்தினர் திருமாலின் அடியவராகக் கருதப்படுகின்றனர்.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (325)
உ.வே.சா.: முதுகண் என்பது பிராயத்திலும் அறிவாலும் முதிர்ந்து அரசர்க்கும் மற்றவர்களுக்கும் உறுதுணையாக இருந்து நீதிகளைச் செவியறிவுறூஉ ஆண்பால் பெண்பாலர்க் குரியதாகச் சிலாசாசனம் முதலியவற்றில் காணப்படுகின்றது.
இவர் உறையூர் அரசர் பால் அத்தொழிலை உடையவராக இருந்தார் போலும்.
=+ஒளவை: இளங்கண்ணன் முதுகண்ணன் என்பவை பண்டையோர்மக்கட்கு இட்டு வழங்கிய பெயர்கள்.
உறையூரில் வாழ்ந்த முதுகண்ணன் என்பவருடைய மகனார் ஆதலால் சாத்தனார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எனப்படுவார்.
ஒருவர் மிக்க இளைஞர் ஒருவருக்குப் பாதுகாப்பாளராக இருப்பாராயின் அவரை முதுகண் (guard) என்பது பழைய நாளை வழக்கு.
12-ஆம் நூற்றாண்டில் எழுந்த கல்வெட்டொன்று இரவில் கூத்தனை முதுகணாக உடைய இவன் பிராமணி தேவன் நீலியும், இவன் மகன் கூத்தன் இரவியும் (S.I.Ins.Vol. IV No 227) என்று கூறுகிறது.
இது கொண்டு முதுகண்ணன் சாத்தனார் மிக்க இளைஞன் ஒருவருக்கு முதுகண்ணாய் இருந்து சிறந்தவராகக் கருதலும் உண்டு.
ஆனால் சொற்களை அவ்வாறு கோடற்கு இடம் தருகின்றிலது. சாத்தனார் சோழன் நலங்கிள்ளி காலத்தவராகலின் அவனைப் பலபடியும் பாராட்டி நல்லறிவு கொளுத்தி உள்ளார் என்பதை முன்னைய இவருடைய பாட்டுக்களால் அறிகின்றோம்.
உறையூர் முதுகூத்தனார் (331)
உ.வே.சா: முதுகூத்தனார். இப்பெயர் முதுகூற்றனார் எனவும் சில பிரதிகளில் காணப்படுகிறது.
=ஔவை: உறையூர் முதுகூத்தனார் எனவும் முதுகூத்தனார் எனவும் சில ஏடுகளில் காணப்படுகிறது.
எருமை வெளியனார் (273)
உ.வே.சா: எருமைவெளி என்பது ஓர் ஊர்…
#ஔவை: எருமை என்பது ஒரூர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனோடு பொருத எழுவருள் எருமையூரன் என்பவன் ஒருவன்.
அவனை நக்கீரனார் “நாரரி நறவின் எருமை யூரன்” (அகம், 36) என்று கூறுவர்.
மைசூர் நாட்டுக்குப் பண்டை நாளில் எருமைநாடு என்றும், மைசூர் எருமையூர் என்றும் வழங்கின.
அப்பகுதியில் உள்ள கல்வெட்டுக்களுள் கன்னட மொழியில் உள்ளவை எருமை நாடு (Eq, car Vol. x Cu 20) என்றும் தமிழ்க் கல்வெட்டுக்கள் எருமைநாடு (AR of 1907 para, 1) என்றும் கூறுகின்றன.
தகடூர் அதியமான்களில் எழினி என்பான் எருவாயில் என்னும் ஊரைக் கைப்பற்றிய போரில் எழினியின் படைமறவன் ஒருவன் போரில் வீழ்ந்து நடுகல் நிறுவப்பட்டான்.
அவனை எருமையநடுகன் என்று கல்வெட்டு (ARNo.211/ 1910 ) எருமை நாட்டு எருமையூரினனாம்.
இந்த எருமையூரில் தோன்றிய சான்றோரது இயற்பெயர் வெளியன் என்பது. இந்நாட்டில் வெளியம் என்ற ஓர் ஊருமுளது.
இவர் பாடிய பாட்டு அகத்திலும் காணப்படுகிறது.
இவருக்குக் ‘கடலன்’ என்ற பெயருடைய மகன் உண்டு.
கடலனாரும் நல்லிசைச் சான்றோராவர்.
ஐயாதி சிறுவெண்தேரையார் (362)
க்
உ.வே.சா: சிறுவெண்டேரையார் ஒருவர் பெயர்இந்நூலுள் காணப்படுகின்றது.
அவரும் இவரும் ஒருவரோ வேறோ விளங்கவில்லை
+ ஒளவை: முன்பு கண்ட சிறுவெண் தேரையாரின் வேறுபடுத்த இவர் ஐயாதி சிறுவெண் தேரையார் எனப்படுகின்றனர்.
ஆதி என்பது இவரது இயற்பெயர்.
இந்த ஆதி என்பதுவே இடைக்காலத்தே ஐயாதியாயிற்றோவென எண்ணுதற்கும் இடம் தருகின்றது.
தொண்டை நாட்டில் பலவாறு என்ற ஊர் சலவாதி என வழங்குவது காண்க.
தேரையார் என்ற ஒரு சான்றோர் பதார்த்த குணசிந்தாமணி என்னும் நூலை எழுதியுள்ளார்.
ஆதி என்னும் பெயரால் ஆதியூர் (A,R.No.778/1933) என்றும், ஆதிகுடி (A.R.No.5/920) என்றும் ஊர்கள் பல இருந்திருக்கின்றன.
ஐயூர் முடவனார் (51)
உ.வே.சா : இவருக்கு முடவனாரென்னும் பெயர் சினையால் வந்தது போலும். இப்பெயர் ஐயூர் கிழாரெனவும், உறையூர் முடவனார் எனவும் சில பிரதிகளில் உள்ளது.
ஐயூர் என்பது சோழநாட்டகத்தோர் ஊர்.
=+ஒளவை: முடவனார் ஐயூர் எனுமூரினர். இவர் முடவரெனப்படுதலால் நடந்து செல்ல இயலாதவரென்றும், இதனால் இவர் தாமான் தான்றிக்கோன் என்பானை அடைந்து வண்டியிழுத்தற்குப் பகடு பல தரப்பெற்றனரென்றும் கூறுவர்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment