POST: 2022-02-19T12:26:09+05:30

அழியாத மை !

” பொதுநலம் ; எங்கும் எதிலும் பொதுநலம் ”

என்று இசைச்சித்தர் அவர்கள் பாடிய இனிய வரிகள் தான் என் நினைவில் ஒலித்தது

மூன்றாண்டுகளுக்கு முன் அம்மாவின் செல்லப் பெயர்த்தி டாக்டர் குறிஞ்சியின் திருமணத்திற்காக மாமல்லை அருகில் சென்றிருந்த போதும் திருமணம் முடித்துவிட்டு நானும் என் அன்னையாரும் வாக்குப்பதிவு செய்து மறுபடியும் மாலை திருமண வரவேற்புக்குக் கிழக்கு கடற்கரைச் சாலை சென்றோம் .

எங்கிருந்தாலும் இதுவரை நாங்கள் வாக்களிக்கத் தவறியதே இல்லை .

என் மூத்த அண்ணன் டாக்டர் கண்ணனும் அன்னையாரை அன்று அரவணைத்து அழைத்து வந்தார் .

சென்றமுறை மட்டும் என் கையைப் பிடித்து அழைத்து வந்த என் அன்னையின் உருக்கத்தை இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் கசிகின்றன

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ( 19.2.2022 ) அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளிக்கு இன்று காலை 9.40 மணிக்குத். தன்னந்தனியாக வாக்களிக்கச் சென்றேன்.

வள்ளியம்மாள் பள்ளிக்கு என்னை அம்மா கைப்பிடித்து அழைத்துச் சேர்த்ததும் அங்கே 2,3,4,5 ஆம் வகுப்புக்கள் படித்ததும் என் நினைவில் படர்கிறது.

வகுப்புக்கு செல்வது போல வாக்களிக்கச் செல்வதும் மக்களாட்சியின் பொலிவுக்கு வலுவூட்டும்.ஒரு வகுப்பின் பாடம் போலத்தான் ! .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *