POST: 2022-01-28T10:50:35+05:30

முரசொலி 28.1.2022
பக்கம் 6

வேழம் வீழ்ந்தது !

கவிவேந்தர் என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற என் இனிய நண்பர் முன்னாள் அமைச்சர் – கழகக் காவலர் வேழவேந்தன் .

பச்சையப்பர் கல்லூரியில் நான் முதுகலை பயின்ற போது இளங்கலை வந்து சேர்ந்தார் .

பேரறிஞர் அண்ணா கைப்பட ஓர் அஞ்சல் அட்டையில் கவிஞரை பொங்கலுக்கு ஒரு கவிதை அனுப்புக என்று எழுதியதைப் பலரிடம் காட்டி நெகிழ்ந்ததை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன் .

புகழ்வாய்ந்த புதல்வர்கள் ,
அருமைத் துணைவியார் கலங்கப் பிரிந்தது ஆறாத் துயரம் தருகிறது .

ஆண்டு தவறாமல் ஒய் எம் சி ஏ வில் பிறந்த நாள் கவிதை பாடித் தலைமை தாங்கினார் .

குடும்ப உறவு பாராட்டி பரிவு காட்டி வந்த அவர் பிரிவு அமைதி தரவில்லை .

மாண்புமிகு முதலமைச்சர் காண வந்து கவிஞரின் நிலை கண்டு கலங்கினார் என்ற செய்தியை ஒரு திங்களுக்கு முன்னர் நானும் பார்த்துக் கலங்கி வினவினேன் .

வாய் திறந்தால் எண்சீரும்
கை தொட்டவுடன் விருத்தப்பாவும் அருவியாகக் கொட்டுவது போல ஆர்ப்பரிக்கும் .

என் கண்ணீரை தான் இப்போது என்னால் உதிர்க்க முடிகிறது .

வருத்தத்தோடு
ஒளவை நடராசன்
27 1 2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *