POST: 2021-06-01T12:22:15+05:30

கதை முடிந்தது – கை குவித்தேன் !

அறிஞர் அனந்த கிருஷ்ணன் ( 12 சூலை 1928 – 29 மே 2021 ) எனக்கு இனிய நண்பராக

புகழ்வாய்ந்த துணைவேந்தர் – அமெரிக்காவில் பல்லாண்டுகள் உயர்நிலையில் பணியாற்றிய பின் அவரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அழைத்து வந்தவர் நம் முதல்வர் கலைஞர் தான் .

சென்னைக்கு வந்த பிறகு அவருக்குத் தமிழியக்கப் பற்றும் தழைத்தது .

வடார்க்காடு மாவட்டத்தில் வாழ்ந்த அவர் மரபினர் திராவிட இயக்கப் பற்று மிகுந்தவர்கள் .

தொண்ணூறு வயதிலும் மேனியில் பெரிய வாட்டமும் – தளர்ச்சியும் இல்லாமல் பெருமிதமாக இருந்தார் .

அவரோடு நானும் – பேராசிரியர் மோகனும் ” கலைஞர் களஞ்சியம் ” தொகுத்தளித்தோம் .

புன்னகையோடு கணினிப் புதுமைகளைத் தமிழுக்குத் சேர்த்தவர் .

அவர் முன்னின்று இணைய மாநாடு நடத்தியது நினைவில் நிற்கிறது .

சிற்றூரிலிருந்து வந்த எளிய மாணவர்கள் பொறியியற் கல்லூரியில் நுழைந்ததும் அனைத்துமே ஆங்கிலத்தில் இருப்பதைக் கண்டு மருண்டனர் .

தமிழில் பாடம் நடத்தலாம் என்று அறிமுக வகுப்பு துணைவேந்தர் தொடங்கினார் .

தமிழார்வம் ததும்பிய நல்லறிஞர் பொறியியற் பேராசிரியராகவும் பணியாற்றினார் .

மூன்று வாரம் வகுப்பு முடிந்தது

.40,14,4 என்ற அளவில் மாணவர் தொகை அருகிற்று .

ஏன் அப்படி என்று துணைவேந்தரைக் கேட்டேன்

.அதுதான் மாணவர் கூட்டின் விளைவு என்றார் .

முதலில் புதியவராக மருண்டனர் .

பழகப் பழக எளிமையாகிவிட்டது .

இனி அவர்கள் தமிழைத் தனியாகப் படித்துக் கொள்வார்கள் ,

நீங்கள் ஒருமுறை ஒரு திருக்குறளைத் வகுப்பு தொடங்கிய நாளில் கூறினீர்கள் என்று நாட்குறிப்பைக் காட்டினார் .

” மனத்துளது போலக் காட்டி மாந்தர்க்கு
இனத்துளது ஆகும் அறிவு ”

என்னைப் பார்க்கும் போதெல்லாம் அந்தத் திருக்குறளைச் சொல்லிக் காட்டுவார் .

அறிவுக் களஞ்சியத்தின் முதுமை தனது கதையை முடித்துக்கொண்டது .

துயரத்தோடு

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *