25 8 2020
அன்புக்குரிய அண்ணனுக்கு வணக்கம் .
செய்தியிதழ்கள் வாயிலாக அண்ணியார் மறைவுச் செய்தியறிந்து உள்ளம் சோர்ந்தோம்.
இல்லம் வரும்போதெல்லாம் இனிய முறுவலுடன் வரவேற்கும் அண்ணியாரின் அன்பு பொழிவுகள் நெஞ்சில் நிலைத்துள்ளன .
தங்களைச்சூழ இருந்து நலம் போற்றிய பேருள்ளம் அவர்களுடையது .
பேராசிரியர் இராசமாணிக்கனார் குடும்பத்தார் அனைவர் சார்பிலும் எங்கள் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
இப்பேரிழப்பைத் தாங்கும் உள்ள உறுதியை இறையருள் தங்களுக்கு வழங்க வேண்டும் .
அருள்கூர்ந்து உடல்நலம் பேணுங்கள் .
அருள் உடனிருக்கிறார் என்று நினைக்கிறேன் .
சென்னை வரும் வாய்ப்பமையும்போது நேரில் சந்திப்பேன் .
அன்புடன்
இரா .கலைக்கோவன் …

Add a Comment