POST: 2019-03-13T10:56:14+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 274)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியிலிருந்தபோது, “வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் தமிழ்” என்ற வணிகத் தொடர்பான சொற்பட்டியல் தொடர்பான அரசாணை 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சொற் பட்டியல்
===============

51. Bakery – அடுமனை
52. Bamboo Mart – மூங்கிலங்காடி, மூங்கில் கடை வைப்பகர்
53. Bankers – வங்கிப் பொருளகர், நிதியர், வட்டிக்கடைக்காரர்
54. Bar – அருந்தகம், மதுக்கூடம், மது அருந்தகம், வழக்குரைஞர் குழாம்
55. Bargain – விலைப் பேச்சு/பேரம்
56. Bar Soap – பாரை வழலை, நீள் வழலை, நீள் சலவைக்கட்டி, நீள் சவர்க்காரம், நீள் சவர்க்காரக் கட்டி
57. Battery Service – மின்கலப் பணியகம்
58. Bazaar – அங்காடி, கடைத்தெரு, கடைவீதி
59. Beacon Light – வழிகாட்டும் ஒளி
60. Beauty Parlour – அழகூட்டு நிலையம், எழில் புனையகம், ஒப்பனை மனை
61. Beavery – விலங்குகள் வளர்ப்பிடம்
62. Bedding Mart – படுக்கை அங்காடி, படுக்கைப் பொருள்கள் விற்பனையகம்/அங்காடி
63. Beeda Stall – வெற்றிலைப் பாக்கு சுருள் நிலையம், மடி வெற்றிலைக் கடை, அடைகாய்க் கடை
64. Beef – மாட்டிறைச்சி
65. Beef Brewis – மாட்டிறைச்சி வடிசாறு
66. Benefit Fund – நலநிதி, நலக்குவை, நலநிதியம்
67. Bhavan – நிலையம்
68. Binder – கட்டகர், நூற்கட்டுநர்
69. Binding Works – கட்டடப் பணியகம், நூற் கட்டடம், பொத்தகக் கட்டுப் பணியகம்
70. Biscuits – ஈரட்டிகள் (உரொட்டிகள்), மாச்சில்லுகள்
71. Block Makers – அச்சுரு வினைஞரகம், படக்கட்டை செய்பவர், படக்கட்டைத் தொழிலர், அச்சுருப் பணியகம்
72. Blue Metals – கருங்கல் நீல மாழைகள், நீல மாழைக் கற்கள், நீலப் பொன்மங்கள், நீல மாழைக் கல்லகம், கருங்கல் சரளை
73. Boarding & Lodging – உண்டுறை விடுதி, உணவு உறையுள் விடுதி, உண்டுறையகம்
74. Body-builders (vehicles)- ஊர்தி உடலங் கட்டுநர், ஊர்தி மேற்கூடு கட்டுநர், ஊர்திக் கட்டுமானம்
75. Boiler – கொதிகலன்
76. Boots – புதை மிதியடி/மூடு காலணி
77. Bore-well Services – ஆழ்துளைக் கிணறு பணியகம்
78. Breweries – வடிப்பகம், வடிசாலை
79. Brickfield – செங்கற் சூளை, காளவாய், காளவாசல்
80. Brick Works – செங்கல் தொழிற்சாலை-தொழிலகம்
81. Broiler Centre – இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)
82. Brothers – உடன்பிறப்புகள், உடன்பிறப்பாளர், அண்ணன் தம்பிகள்
83. Builders – கட்டட அமைப்பாளர், கட்டடக் கலைஞர், கட்டுநர்
84. Building Society – கட்டுமானக் கழகம்
85. Buffet – எடுத்தூண், மகிழ்ந்தூண், கூட்டூன் சிற்றுண்டியகம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *