திசை எட்டும் – மொழியாக்கக் காலாண்டிதழ்
(அக்டோபர் – டிசம்பர் 2018)
=========================================
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குக் கலைச் சொல்லாக்கம் தேவை. இதுவரை சிறியனவும், பெரியனவுமாக 200 தொகுப்புகள் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் ஏறத்தாழ 2,00,000 சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஓர் ஆங்கிலச்சொல் நம்மிடையே பழக்கத்துக்கு வந்த மூன்று நாட்களுக்குள் அதற்கு ஈடான தமிழ்ச்சொல் அமையவில்லை என்றால் அந்த அயற் சொல் நிலைத்துவிடும். இன்று 10 இலட்சம் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன. முயன்று ஐந்து இலட்சம் சொற்களே தமிழில் கண்டறியப்பட்டுள்ளன. தொழில்நுட்பச் சொற்களை மொழிபெயர்க்கும்போது, மூல மொழியின் தன்மை கெடாதபடி சொற்களை உருவாக்க வேண்டும். ஏற்ற சொற்கள் கிடைக்கவில்லை எனில் பொருள் நிலையில் மிகவும் நெருக்கமான சொற்களைப் பயன் கொள்ளலாம்.
எப்போதும் ஒரு சொல்லுக்கு உடனே மொழியாக்கம் கேளாமல் மாற்றி மூன்று தொடர்களில் அச்சொற்கள் எப்படி ஆளப்படலாம் என்பதை அறிவுறுத்துவதே மொழியாக்கத்திற்கு முழுமையாகப் பொருள் தரும்.
தமிழில் எந்தச் சொல்லும் நான்கெழுத்தை விஞ்சியதேயில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு சொற்கள் மூன்றெழுத்திலேயே முடியும். ஆங்கிலச் சொல்லை மொழியாக்கும்போது ஓர் எழுத்து குறைந்தால்தான் தமிழ் என்று கருதலாம்.
—– ஔவை அருள்.

Add a Comment