மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-150
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை (தொடர்ச்சி)….
=================================================
புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தவர்கள் புரண்டு உருண்டார்கள்.
மனிதர்களைப்படித்த மாவீரர் புரட்சித் தலைவரே தனித்துத் தலை சிறந்து நின்றார்.
சாதாரணமானவர்களின் அன்றாட ஆசைகளை எடைபோடத் தெரிந்தவர் அவர் ஒருவர்தான்!
ஆகவேதான் கதைகளைப் பற்றிய அவரது கணக்குகள் தப்பாமலே இருந்தன 1962ஆம் ஆண்டுவெளிவந்த “பாசம்’ படத்தில் கதாநாயகன் சோக முடிவுக்கு ஆளாகிறான். படம் வெற்றி பெற இயலவில்லை.
அந்தப் பாத்திரத்திற்கு ஏற்படுகிற அவலமான முடிவைக் கூட படம் பார்க்கிறவர்கள் ஏற்காத
சூழ்நிலை!
எந்த அளவிற்கு புரட்சித்தலைவர் மக்களின் மனங்களில் வேர்விட்டிருக்கிறார் என்பதற்கு அவரது சரித்திரத்தில் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

Add a Comment