எம்.ஜி.ஆர். – ஜானகி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-30
————-
ஒலைச்சுவடிகள் இருப்பனவாக எண்ணிக் கொண்டு, ஒலைச்சுவடிகள் ஆய்வு மற்றும் காப்புத்துறை என்று பணிகள் நடந்தன. இப்படித்தான் ஐந்திறம் ஒருவரது தந்திரம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. நான் எத்தனை முறை சொன்னாலும், இந்த உலகம் நம்பவில்லை.
ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், ஆட்சியில் இருப்பவர்களுக்கென்று ஒரு திறம் இருக்கிறது. உரியவர்களைக் கண்டு பேசி, உரியவர்களைக் கேட்டுச் செய்யாமல், நமக்கே எல்லாம் தெரியும் என்று தலையசைப்பதால், எப்படிப்பட்ட மாற்றங்கள் தமிழுக்கு நேர்ந்து விடுகின்றன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னும் ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். திருக்குறளைக்கூட தேசிய நூல் ஆக்கலாம் என்ற கருத்து, ஒருமுறை எழுந்தது. குன்றக்குடி அடிகளார், எழுத்தாளர் அகிலன் போன்ற பலர் இது பற்றிப் பேசியிருக்கிறார்கள். முதலமைச்சர் என்னை அழைத்து, இது பற்றி ஆங்கிலத்தில் கடிதம் எழுதுங்கள். நான் தில்லியில் போய், பேசிவருகிறேன் என்றார். அதன்பின் சிலநாள் கழித்து தில்லி சென்ற முதலமைச்சர், இது பற்றிப் பேசிவிட்டு வந்தார்.

Add a Comment