எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-5
———
புரட்சித்தலைவர் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு குறை இருந்தது என்றால், நான் கல்வி கற்ற முடியவில்லை.என்னுடைய வாழ்க்கையை நான் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ நிகழ்த்த முடியாமல் போய்விட்டது. இப்போது என்னுடைய ஆட்சியில், காணும் இடமெல்லாம், பள்ளிகளும், கலைக்கல்லூரிகளும் நிறைந்திருப்பதை காணும்போது என்னுடைய கனவு நிறைவேறியுள்ளது என்று சொன்னார்கள். திரைப்படங்களெல்லாம், வேடிக்கை படங்கள், நையாண்டி படங்கள், கேளிக்கை படங்கள் என்று நாட்டு மக்கள் நினைத்தபோது, திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு நல்லறிவையும், பெண்களுக்கு உயர்வையும் கல்வியறிவையும் வீரத்தின் மாட்சியையும் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்திய பெருமை புரட்சித்தலைவர் அவர்களைச் சாரும்.

Add a Comment