எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை – 1
மாணவச் செம்மல்களாகிய உங்களை ஆயிரக்கணக்கில் இங்கே நிரம்பி வழிவதைக் கண்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
ஆயிரத்தில் ஒருவன் என்று இந்த நாடு புகழ்கின்ற கோடி கொடுத்த கோமான் என்றும் கொடை வள்ளல் என்றும் ஒப்பற்ற தமிழகத்தின் புரட்சித்தலைவர் என்றும் பெருமைக்குரிய முதலமைச்சர் என்றும் நாடு போற்றுகின்ற எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை உலகமெல்லாம் கொண்டாடி மகிழத் தொடங்கியிருக்கிறது என்றாலும்கூட எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி இதை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைவிட நெகிழ்ச்சி தருகின்ற நிகழ்ச்சி எதுவும் இருக்க முடியாது.

Add a Comment