POST: 2016-07-08T13:03:01+05:30

முனைவர் ஔவை நடராசன் அவர்களின் இரங்கலுரை

காரோட்டி தனராஜை இழந்து கலங்குகிறேன்
———————————————————————–

திரு.தனராஜ், காரோட்டியாக தன் அரசாங்க வாழ்வைத் தொடங்கியது என்னிடத்தில்தான். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வளாகத்தில் ஓட்டுநர் ஒருவராக இருந்து நேற்றிரவு (06.07.2016) மறைந்தார்.

தன் இல்லத்திற்கு ஔவை நடராசன் இல்லமென்றும், தன் மக்களுக்கு அருள், நடராசன், தாரா என்று எப்போதும் எங்கள் பெயரையே அவர் வாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒல்லியான உடலும் உறுதியான நெஞ்சும் கொண்ட தனராஜ் திருமணத்தையும் நானே நடத்தினேன்.

நலிந்து நஞ்சு அருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திரு.தனராஜை உயிர் காத்த பெருமை என் துணைவியார் டாக்டர் தாரா அவர்களைச் சாரும்.

அன்று முதல் என் இல்லமே அவர் வீடாய் ஆயிற்று.

நன்றியிற் செழித்த தனராஜ் தன் மக்கட் செல்வங்களை உயர்ந்த நிலைக்கு வளர்த்திருக்கிறார்.

அவர் இழப்பு என் மனத்தில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *