POST: 2016-04-05T15:04:06+05:30

முனைவர் ஔவை நடராசன் அவர்கள் டர்பன் (தென்னாப்பிரிக்காவில்)-ல் இருந்து 13.10.1986 அன்று அருளுக்கு எழுதிய கடித சுருக்கம்.

ஒரே English atmosphere-ல் என்னைத் தவிர இன்னொருவரானால் திக்குமுக்காடிவிடுவார்கள். முதல்நாள் வந்து சேர்ந்ததுமே இங்கே பனிக்காற்று வீசுகிறது.

In view of the arrival of the guest of honour we have arranged this Conference என்று ஆங்கில வரவேற்பு. 20 நிமிடம் ஒரு கச்சேரி. பிறகு நான் 5 நிமிடம் ஆங்கிலத்தில் நன்றி சொல்லி முடித்தேன். எங்கே தமிழில் பேசுவிடுவீர்களோ என்று பயந்தோம். நல்ல வேளையாக ஆங்கிலத்தில் அற்புதமாகப் பேசுகிறீர்கள். You are a learned scholar என்று பலர் கை குலுக்கினார்கள். எனக்கல்லவா என் வேதனை தெரியும்.!

இரவு 10 மணிக்குத் திரும்பினேன். அங்கே நள்ளிரவு 1 மணிக்குமேல் தூக்கக் கலக்கம். வழக்கம் போல சாப்பாட்டுக் கஷ்டம். Golden Jubilee Inauguration முடிந்தது. என் பேச்சு எவ்வளவு வேகம் தெரியுமா. 7 நிமிடம் மட்டும்தான்.

பாட்டு, நடனம், நான் தலைவருக்கு பொன்னாடை போர்த்தியது, முதலமைச்சர் வாழ்த்துப் படித்தது, திருக்குறள் நூல்களை கொடுத்தது. இவைகள் எல்லாம் முடிந்தது.

அங்கேயே Tea & Toast இப்படியாக இன்றைய விழா – பல நண்பர்கள் என்னைப் பார்த்துக் கேள்விக்கேட்டு அங்கேயே Discussion செய்கிறார்கள்.

Whites, Coloured, Black, Indian Tamils என்று பலரைப் பார்க்க முடிகிறது. நிற வேறுபாடு எனக்கு தெரியாது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *