POST: 2016-02-26T14:08:19+05:30

ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-1

ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி நடத்தி, அதில் பரிசு வழங்கி, கணக்கெடுத்துப்பார்த்தால் ஒருமூன்று இலட்சம் மாணவர்கள் பாரதி பாடலை இப்போது அறிந்திருக்கிறார்கள். இது பாரதி கலைஇலக்கியக்கழகம் ஆற்றிய ஒரு பெரும்பணி.

இன்றுதான் பாரதியாருக்கு பிறந்தநாள் என்று இல்லை. நாளும் பாரதியார் பிறந்தநாள் தான். பாரதி உணர்வுள்ளவர்களுக்கு ஒவ்வொரு கணமும் பிறந்தநாள்தான்.

அந்த வகையில் மழைதான் நாம் விரும்பிக்கேட்டோமே தவிர, வெள்ளத்தை யாரும் விரும்பிக்கேட்கவில்லை. ஆனால், வெள்ளம் புரண்டு வந்ததால், மாணவர்களையெல்லாம் ஒன்றாகத்திரட்டி போட்டி நடத்த முடியாமல் இந்த ஆண்டு சோர்ந்துவிட்டோம்.

இந்த சோர்வுக்கெல்லாம், ஒரு பெரிய மிகப்பெரிய சோர்வைத் தந்த நிகழ்வை நான் சொல்லவேண்டும்.

25 ஆண்டுகளுக்கு மேலாக எல்லா உழைப்பையும் தன்னுடைய தோளில் ஏற்றிக்கொண்டு போட்டிகளை நடத்துவதற்கும், விழாவை நடத்துவதற்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்டவர், அமுதசுரபியின் ஆசிரியராக பல்லாண்டுகள் இருந்ததோடு, இலக்கியபீடத்தின் ஆசிரியராகவும், எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த கண்ணெதிரிலேயே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மாபெரும் எழுத்தாளர் திலகம் விக்ரமன்அவர்கள் நம்முடைய கண்கள் இப்போது தேடினாலும், காணமுடியாமல் தற்போது மறைந்துவிட்டால் என்பது பெரும் துன்பம் தருவது என்றாலும் அவரது நினைவெல்லாம் இந்தவிழாவிலே தான் இருக்கும். எனவே, விக்ரமன் அவர்கள் தொடர்ந்த பணியை பாரதி இலக்கியக்கழகம் தொடர்ந்து நடத்தும்.

பெருமக்களே

வழக்கம்போல ஸ்ரீராம் நிறுவனங்கள் பெரிய தொழில் நிறுவனங்களாக திகழ்ந்த போதும் கூட கலை இலக்கியங்களை வளர்ப்பதில் ஒரு தனி ஆர்வம் காட்டுகிற முயற்சியில் பாரதி விருதுகளை வழங்குவதும், திருவள்ளுவர் விருது வழங்குவதுமாக ஓர் அரும்பணியாற்றுகிறது. அந்த வகையிலேதான் இந்தபணியும் நடைபெறுகிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *