ஆத்திசூடி முதற்றே உலகு
விளையாடும் பருவத்திலேயே வேதமாக கற்றமைந்த ஆத்திசூடியை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு தொடராக எங்கள் மொழிபெயர்ப்புத் துறையின் உதவிப் பிரிவு அலுவலர்கள் முறையே ம.பொன்னையா பூபதி ராஜா (இந்தி), கே.எஸ்.பரத்குமார் (தெலுங்கு, கன்னடம்) மற்றும் திருமதி.அஜிதா பர்னபாஸ் (மலையாளம்) ஆகியோரின் ஆத்திசூடி மொழிபெயர்ப்பு நூல்கள் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் நேற்று (24.03.2016) அன்று வெளியிடப்பட்டது.
ஆத்திசூடி, அறிஞர்கள் தொடங்கி இளைஞ்சிறுவர்கள் வரை படித்து மகிழ்வார்கள். ஆத்திசூடிக்கு பேரறிஞர் பெருமக்கள் உரையெழுதியதோடு நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில அறிஞர்களும் மொழிபெயர்த்துள்ளனர். எனவே, மொழிபெயர்ப்புத்துறை தன் முதற் பாடத்தை கற்கத் தொடங்கியிருக்கிறது.

Add a Comment