தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 7 நாட்கள் நடைபெறும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சி பட்டறை உலக பல்கலைக்கழக பணி மன்றத்தில் மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநர் ந.அருள் அவர்களின் வாழ்த்துரையிலிருந்து சில துளிகள்
சென்னையில் 3வது முறையாக இந்த பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.
உலக பல்கலைக்கழக பணி மன்றம் 46 ஆண்டுகளுக்கு முன்னர் டென்மார்க் அரசின் உதவியோடு தமிழக அரசால் நிறுவப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக மாணவ-மாணவியர்களுக்கு கருத்தரங்க அறைகளும் தங்கும் விடுதியுமாக கட்டப்பட்டது. எனக்கு நன்றாக நினைவிற்கு வருவது என்னவென்றால், மாணவர்களாலேயே மாணவம் என்ற செய்தி இதழ் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றது. பல நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் இந்த மாமன்றத்தில் நடைபெற்றதெல்லாம் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.
இளந்தமிழர் இலக்கியப் பட்டறை மாணவ-மாணவியரின் திறன்களை கூர் தீட்டும் பாசறையாகும். இதே முறையினை பல்லாண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாட்டின் பேரறிஞர் டேல் கார்னஜி (Dale Carniege) How to win friends and Influence people, Fine art of public speaking போன்ற புகழ்ப்பெற்ற தன்னம்பிக்கை நூல்களை யாத்தவர் போல இந்த பட்டறையும் மிளிரும்.

Add a Comment