POST: 2015-12-07T16:48:24+05:30

முனைவர் ஒளவை நடராசன்
முன்னாள் துணைவேந்தர்
வாழ்த்துரை
உயர்வற உயர்ந்ததன்றே!-3

உலகம் நிலம், நீர், தீ, வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் என்ற நிலையில் அமைந்ததென்றும், உலக வாழ்வுக்குக் காலம், உலகம், உயிரே, உடம்பே, பால்வரை தெய்வம், வினையே பூதம், ஞாயிறு, திங்கள், சொல் என வருஉம் ஆயீரைந்தும் துணைப் பொருள்களாக நிற்கின்றன.

ஞாயிறு, திங்களைக் குறித்தது போல விண்மீன்களை ஆசிரியர் குறித்தாரல்லர். கடல்வாழ் மக்கள் தம் கடற்செலவில் இமைக்கும் சுடர்களாக விண்மீன்களைக் கொண்டு காலத்தையும் கணக்கையும், தாம் செல்லும் இடத்தையும் வழியையும் கருதினர். இப்பாங்கு கிரேக்க நாட்டவரின் முதல் முயற்சியாகும்.

இந்த இயல்பே விண்மீன்களை எண்ணுவதற்கும், விண்மீன்கள் விழுவது பற்றி அஞ்சுதற்கும், விண்மீன்கள் தொகையாக அமைந்த தோற்றத்தை ஆடு, மீன், தேள், அடுப்பு முதலிய வடிவங்களாகக் கொண்டு கற்பனையாகப் பெயரிட்டனர். இக்கருத்தலைகள் சங்க இலக்கியங்களில் பத்திரண்டு பாடல்களில் காணலாம்.

செம்மீன், விண்மீன், வெள்ளி, மைமீன், நாள்மீன், கோள்மீன், சகடம், உரோகினி முதலிய பல சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *