சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை
தொகுப்பாசிரியர்
ஆங்கில மூலம்
பீட்டர் குயென்னெல்
அறிமுகம்-4
– பீட்டர் குயென்னெல்
நாடகங்களின் ஆசிரியரான அவர் செவ்வியல் இலக்கிய மேதை அல்ல, அதனை அவர் தன்னுடைய போட்டியாரான பென் ஜான்சனுக்கு விட்டு விட்டார். ஆனால், நன்கு கல்வி பயின்றவர் என்பது மட்டும் தெளிவு; அவருடை வாழ்நாளின் ஒரு கட்டத்தில் அவர் சட்டம் பயின்றுள்ளார் என்பது வெள்ளிடை மலை. அதனால் தான் அவர் வளர்ந்த பின்னர், ஒரு வழக்கறிஞரிடம் பணியாற்றி வாழ்ந்தார் என்கிற கதை நமக்குக் கிடைத்துள்ளது. அதே சமையத்தில் அவர் கிராமப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார் என்று கருதுவதற்கும் இடமுண்டு.
ஊகத்தின் அடிப்படையில் மூன்று கோட்பாடுகள் நிலவுகின்றன. இருப்பினும், 1582ஆம் ஆண்டு இறுதியில், அவர் ஸ்ட்ரேட்ஃபோர்டில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே, அவசரக் கோலத்தில் ஒருவகையில் மதிப்பற்றதொரு மணப் பிணைப்பில் ஈடுபட்டார் அல்லது ஈடுபடுமாறு வலியுறுத்தப்பட்டார் என்பதை நாமறிவோம்.
அவருடைய மனைவி அன்னே ஆத்தவே அவரைக் காட்டிலும் எட்டு வயது மூத்தவர்; திருமணத்தின் பொழுது அவர் கற்பமுற்றிருந்தார். 1583ஆம் ஆண்டு மே மாதத்தில் அவள் தன்னுடைய முதல் குழந்தை சுசன்னவை ஈன்றெடுத்தாள்.
பதிவுகள் ஒரு குறிப்பிட்ட அளவு கால இடைவெளியைக் காட்டுகின்றன. 1585ஆம் ஆண்டு சனவரித் திங்களில் வில்லியமிற்கும் அன்னே சேக்ஸ்பியருக்கும் ஹேம்னெட், ஜூடித் என்கிற பெயர்கள் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பயன்குறைந்தது என்ற போதிலும் கதையொன்று நன்கு அறியப்பட்ட கதை ஒன்று நிலவுகிறது.
அண்மையிலிருந்த பூங்காவிற்குள் வரம்பு மீறி நுழைந்து அங்கிருந்த மான்களோடு்ம் முயல்களோடும் அவர் போட்ட ஆட்டத்தால் களவுக் குற்றம் சுமத்தப்பட்டு ஸ்ட்ரேட்.போர்டையும் மனைவி மக்களையும் பிரிந்து இலண்டனில் தஞ்சம் புக வேண்டியநிலைமை ஏற்பட்டது.
சேக்ஸ்பியருடைய வாழ்க்கை குறித்து நாமறிந்துள்ள மெய்யான தகவல்கள் 1592ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தே துவங்குகின்றன. அந்தக் காலக்கட்டத்திற்குள் அவர் .லண்டனில் தனக்கென ஊரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
நடிகராகவும், நாடக ஆசிரியராகவும் பயிற்சி பெற்றார். பரவலான புகழ் பெற்ற வரலாற்று நாடகம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றார். ஆறாம் ஹென்றி மன்னரின் அழிவு விளைத்த ஆட்சியை அந்நாடகம் தொகுத்தளித்தது. அந்நாடகத்தில் அவருடைய முயற்சிகள் சமகாலத்திய கவிஞருடைய மனவருத்தத்தையும் கடும் சினத்தையும் தூண்டுமளவிற்கு வெற்றியை ஈட்டித் தந்தது.
இராபர்ட் கிரீன் என்கிற அக்கவிஞர் நோய்வாய்ப்பட்டிருந்த வயசாளி; மிகுந்த வெறுப்படைந்தார். தனது இறப்பிற்குப் பின் அவர் விட்டுச் சென்றிருந்த துண்டறிக்கையில், நாடக மேடைகளுடைய தீங்குகளைப் பற்றியும் அவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தோருக்கு அவற்றுள் பொதிந்திருந்த புதைகுழிகளைப் பற்றியும் எச்சரித்ததுடன், தனியொருவரைச் சுட்டிக் காட்டி ஆர்வக் கோளாறுமிக்கவனும் பழியஞ்சாதவனுமான அந்த இளைஞன் பிறருடைய கவிதைகளைக் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார்:
“நம்முடைய இறகுகளைக் கொண்டு தன்னுடைய சிறகுகளை அழகு படுத்திக் கொண்ட காக்கை…. எளிய கவிதை ஒன்றை உங்களுடைய மிகச் சிறந்த படைப்பாக மேம்படுத்திக் காட்டும் திறம்படைத்தவனாகத் தோ்றுகிறான். தன்னை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு மக்களுக்குக் காட்சிப் படுத்தத் தெரிந்த இந்நாட்டின் ஒரே ஏமாற்றுக்காரன்…’’

Add a Comment