25TH GRADUATION DAY SPEECH
ON 05.07.2015
CHIEF GUEST’S SPEECH BY
THIRU.AVVAI NATARAJAN
Valliammal Women college,Annanagar (1-8)
…
Mr.Maikandan,
Esteemed Professor Mr.Valavan
Academic advisor Mr.Natarajan,
Respected Principal Madam Pathmaja
Remarkable galaxy of graduates
I feel it is a great honour to enter to this Institution because and rather moved when I just enter because the very founder the great noble Dr.A.M.Paramasivanandham was my teacher.
I studied about three years under him and I know how his dream was this academic institution and every brick and mortar of this institution is because of the hard, loyal, tears, sweat and blood of Dr.A.M.Paramasivanandham.
I really appreciate Mr.Maikandan, who follows the foot path so sincerely that he was able to make the Graduation day associated with the founder’s day of Dr.A.M.Paramasivanandham.
I wish all my best for the future of this Valliammal Institution and it is my dream one day it will turn to be a University and Dr.Maikandan, could do all his efforts to that.
அன்புள்ள கல்லூரி முதல்வர் அவர்களே,
பெருந்தகை மெய்கண்டார் அவர்களே,
பெருந்தகை வளவன் அவர்களே,
நடராஜன் அவர்களே
ஆசிரியர் பெருமக்களே
பட்டம் பெருகின்ற மகிழ்ச்சியோடு இங்கே நிரம்பி வழிகின்றன உங்களைக் காண்கின்ற போது எனக்கு ரொம்ப மகிழ்சியாக இருக்கிறது.
பேராசிரியர் ஆ.மு.பரமசிவானந்தம் அவரிடத்தில் நான் மூன்றாண்டுகள் மாணவனாக படித்தவன். மாணவர் மீது அவர் எவ்வளவு பரிவு காட்டினார் என்பதை இப்போது நான் நினைத்தாலும் கூட என் நெஞ்சம் நெகிழ்கிறது.
நாங்கள் மாணவர்களாக இருந்தபொழுது அந்தி வேளையில் அவரின் இல்லத்துக்கே செல்வோம். அந்த பேராசிரியர் எங்களுக்கெல்லாம் சிற்றுண்டி தருவார். ஆக the ideal professor whom he could dream that always filled with Professor A.M.Paramasivanandham.
அவர் பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருடைய மனம் கண்ட கனவுதான் தன்னுடைய அருமை தாயாரை நினைக்கிற வகையில் வள்ளியம்மாள் திருப் பெயரில் இந்தக் கல்லூரியை அவர் தொடங்கினார்.
அவருடைய தாய்ப் பற்று மட்டும் இல்லை, அவருடைய தாய் மொழிப் பற்று, அவருடைய கல்வி விருப்பம், அவருடைய கடுமையான உழைப்பு, அதுவும் மகளிர் கல்லூரியாக என்று தொடங்க வேண்டும் என்ற மாட்சி இவைகளில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று காலை நீங்கள் வந்த நாளிதழ்களைப் புரட்டிப் பார்த்தால் the first 6 persons who have come with I.A.S., honour are all women. இது எவ்வளவு பெருமையாக இருக்கிறது பாருங்கள். மகளிர் கல்வி நிலையில் எவ்வள உயர்ந்து இருக்கிறார்கள் என்பதை பல்வேறு நிலைகள் எடுத்துக் காட்டினாலும் வள்ளியம்மாள் கல்லூரி in east or west this is the best in the area of Anna nagar.
தற்போது எனக்கு என்ன கவலை என்றால் என்னுடைய மனைவியார் ஒரு பெரிய மருத்துவர். அவரும் ஒரு கல்லூரிக்கும் முதல்வராகவே மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் ஆக இருந்தவர்
எனக்கு ஒரு அதிர்ஷ்டக் குறைவு எனக்கு பிறந்த குழந்தைகள் மூன்று பேரும் ஆண் குழந்தைகள் ஆக பிறந்துவிட்டார்கள். ரொம்ப ஆசைப்பட்டேன். ஒரு பெண் குழந்தையாவது பிறக்காதா என்று. முதல் பையன் பிறந்துவிட்டு நான் காத்திருந்த பொழுது இரண்டாவது பெண் பிறக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். போதாக்குறைக்கு ஜோதிடக்காரர்கள் பெண்தான் பிறக்கும் என்று சொன்னார்கள். நான் அந்த பெண் குழந்தைக்கு பெயர் கூட எழுதி வைத்து விட்டேன். அங்கே போய் பார்த்தால் ஆண் குழந்தை பிறந்தது. சரி என்று ஒரு சலிப்போடுதான் வந்தேன். அந்த பெயர்தான் அருள் என்று அந்த பையனுக்கு வைத்து விட்டேன்.
பிறகு ஒரு ஜோதிடர் சொன்னார், மூன்றாவது பிறக்கிற குழந்தை பெண்ணாகதான் பிறக்க போகிறது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நானும் சரி என்று பார்த்தேன். மூன்றாவது குழந்தை பிறந்தது, அதுவும் ஆண் பையன். அதற்கப்புறம் அந்த முயற்சியை நான் விட்டுவிட்டேன்.
You should always to remember the father of girl children is the greatest fortune that can anybody enjoy. The affection, the affordability, the knowledge, the hard work and the sufficient love showers over the family are all rather inbuilt in the minds of the young women student.
மகளிராக இருக்கிற நீங்கள் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பேர் படிக்கிற வாய்ப்பு வரவில்லை. ஆனால் இரண்டாயிரத்து பத்துக்குப் பிறகு அல்லது இன்னும் சொன்னால் இரண்டாயிரத்து ஐந்துக்குப் பிறகு மகளிர் இல்லாத துறையே இல்லை எனலாம். எல்லாத் துறையிலும் விண்வெளியிலே பறபதற்கும் மகளிர் வருகிறார்கள். வீட்டைக் காப்பது போலே நாட்டைக் காப்பதிலும் போர் திறனிலும் மகளிர் வருகிறார்கள். ஆட்சித் துறையிலும் வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய திறமையை அவ்வளவு அருமையாக வெளிப்படுத்துகிறார்கள்.
நான் இப்போது ஒரு செய்தி சொல்லப் போகிறேன். இதை நீங்கள் வெளியே யாரிடமும் போய் சொல்லக் கூடாது. என்னவென்றால், விஞ்ஞானிகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்து, ஆண்களை விட பெண்களின் மூளைக்குத்தான் திறமை அதிகம் என்று கூறியுள்ளார்கள். காரணம், ஊன்றிப் பார்க்கிற உற்றுப் பார்க்கிற உணர்ச்சி என்பது மக்களுக்கு பெறற்கரிய பெரும் பேராகும். கிரேக்கர்கள் எந்த சிலையை வடித்தாலும் அந்த சிலை எப்படி இருக்கும் என்று சொன்னால், திருவள்ளுவர் போல அமர்ந்து இருக்காது. கௌதம புத்தர் போல அமர்ந்து இருக்காது. நீங்கள் பார்க்கலாம் கிரேக்கத்துனுடைய சிலை நாடு பிடித்தபோது கூட நெற்றியில் கை வைத்துக்கொண்டு சிந்திப்பதுபோலதான் வடிப்பார்கள்.
The fatality of thinking which has created the human kind to the highest pedestal has been rather a very fortunately in the hopeful to the humanity therefore whatever the statue they created only the thinking faculty.
அப்படி சிந்திக்கிற வகையில் மாணவிகள், மாணவர்கள் என்று வேறுபாடு பார்க்கக் கூடாது என்பதுதான் காலத்தின் சூழல். ஒரு வேளை இங்கு இருக்கிற அறிஞர்களுக்கு தெரியுமோ தெரியோதோ குதிரை பந்தயம் நடக்கிறது பாருங்கள், அந்த குதிரை பந்தயத்தில், எந்த குதிரை வேகமாக ஓடுகிறது என்று பார்த்தால், அதைபோய் ஆண் குதிரை, பெண் குதிரை என்று கேட்கக்கூடாது.
It is rather usual in the case of பெண் குதிரை ஓடுகிறது என்று சொன்னால், அதனுடைய ஓட்டத்தை, ஆண் குதிரை வெல்ல முடியாது. ஆணா பெண்ணா என்று கேட்கிற கேள்வியே தவறு.
I hope your Principal may know that,
அமெரிக்க நாட்டிலும், நியூசுலாந்து நாட்டிலும் When you join for your higher study, when they give the application form, they will ask your vain, they will never ask your sex, they will never ask about your age எவ்வளவு வியப்பு பாருங்கள்.
நாம் எழுதும் போதே, பெயர், ஆணா, பெண்ணா எனவே நீங்கள் மகளிர் என்று நினைபதற்க்கு தனியாக ஒரு தனித்தன்மை இல்லை.
பாரதியாரை பாருங்கள், எல்லாரும் சமானம் என்று சொன்னால் போதும், நிகர்னு சொன்னால் போதும். சரியானவர்கள் என்று சொன்னால் போதும். சரி, நிகர், சமானம்.
எனவே, இப்போது அப்படிப்பட்ட கருத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் கூட சொன்னால், அச்சம் என்பதை எந்த நிலையிலும் வாழ்வில் வைத்துக் கொள்ளவே கூடாது. அச்சமில்லாமல் வாழ முடியும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டியது தாய் தான். அப்படிப்பட்ட உணர்வு தான் உங்களுக்கு வர வேண்டும்.
ஒரு நிகழ்ச்சியை மட்டும் சொல்லி முடிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
It was during the reign of Queen Victoria. Queen Victoria was the Queen for quite a long time.
ஒரு தடவை குயின் விக்டோரியா லண்டனில் ஒரு தெரு வழியாக போய்க் கொண்டிருந்தார்கள். அந்த காலத்திலும் சரி, இப்போதும் நீங்கள் பார்க்கலாம், நீங்கள் யாரேனும், நிச்சியமாக இங்கிலாந்து போய் இருப்பீர்கள். அங்கு ஒரு பெரிய கடை இருக்கிறது. நம்ம சிந்தாமணி என்று வைத்துக் கொள்ளுங்களேன். Harrods என்று பெயர் அதற்க்கு. அந்த கடையில வந்து பொருள் வாங்குகிறவர்கள் யார் என்று பார்த்தால், குயின் கூட வந்து வாங்குவார்கள். குயினுடைய வீட்டுக்காரர்கள் வந்து வாங்குவார்கள். அவர்களுக்கு எந்த விதமான வேறுபாடும் இல்லை. விக்டோரியா காரில் போகும்போது பின்னால் நான்கு கார் முன்னால் மூன்று கார் போகாது. விக்டோரியா போகிறார்கள் என்றே பலருக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஹாய் குயின் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள்.
விக்டோரியா என்ன செய்தார்கள் அப்படி போகும்போது அங்க ஒரு விமன்ஸ் காலேஜ் இருக்கிறது. பார்த்த உடனே அந்த அம்மா காரை நிறுத்தினார்கள். அது விமன்ஸ் காலேஜ் என்று இருந்து that became both Mens college too. அந்த அம்மா இறங்குகிறார்கள் காரை விட்டு. இறங்கி போகும்போது வகுப்பு நடந்து கொண்டே இருக்கிறது. அந்த அம்மா நடந்து வந்ததை யாரும் கவனிக்கவில்லை. நேரடியாக இரண்டு மூன்று வகுப்புக்குள் அந்த அம்மா நுழைந்தார்கள். பார்த்து, அந்த பிள்ளைகளை பார்த்து பேசிவிட்டார்கள். உடனே பாருங்கள், அந்த பள்ளியும் ஒரு ஏவலர் அதை பார்த்துவிட்டார். ஓடிப்போய் அவர்களின் கல்லூரியின் சேர்மனைப் பார்த்து Her majesty Queen has come, Wow, Queen. அப்படியே அசந்து விட்டார்கள்.
பிரின்சிபால் பேசும்போது சொன்னார்கள், We always care for your tradition, convention and the methodology what you follow என்று சொன்னது போல, உடனே வேகமாக வந்தார்கள். குயினைப் பார்த்த உடனே வணங்கினார்கள். குயின் அப்படியே சுற்றிப் பார்த்துவிட்டு, போகும்போது அந்த சேர்மன் சொன்னார்,
Her majesty, we are honoured by your presence, we may request you, to come to the Chairman’s Room and have a coffee. சரி என்று குயின் போனார்கள். குயின் போன உடனே பாருங்கள், சேர்மன் அந்த ரூம் ஜன்னல் கதவுகளை மூடிவிட்டார். முன் கதவையும் மூடிவிட்டார். மூடி விட்ட பிறகு இங்கிலாந்து நாட்டு வழக்கம் என்னவென்று கேட்டால், அரசியைப் பார்க்கிறபோது மண்டியிட்டு, அவரின், இடது கையைத் தொட்டு, இடது கை விரலில் உள்ள மோதிரத்திற்கு முத்தமிட வேண்டும். I hope they would have known about that. That is the traditional way of inviting the Queen. கதவையெல்லாம் மூடிவிட்ட பிறகு சேர்மன் மண்டியிட்டார். மண்டியிட்டு, இடது கை விரலில் உள்ள மோதிரத்திற்கு முத்தமிட்டு Hail Queen, A majesty’s presence, make this institution honoured என்று சொல்லி நிமிர்ந்தார். Thank you very much Mr.Chairman, are we not expected to follow the kind of tradition, when I just enter, what is the change for the reason என்று கேட்டார்.
அரசியார் வருகிறார் என்று சொன்னால், வாயிற் கதவு திறந்த உடனே இப்படி வணங்கி இருக்க வேண்டுமே, நீங்கள் ஒரு புகழ் வாய்ந்தவர் ஆயிற்றே, அதுவும் கல்வித் துறையில் மிகவும் வல்லவர் ஆயிற்றே. இப்போது சொல்கிறேன் அவர் பெயர் அர்நால்ட்,
நீங்கள் இப்படி கதவையெல்லாம் மூடிவிட்டு இப்படி மண்டியிட்டு, எனக்கு வணக்கம் சொல்லுகிறீர்களே, இது என்ன முறை என்று கேட்டார்.
அவர் என்ன சொன்னார் தெரியுமா?
“மேன்மை தங்கிய அரசியார் அவர்களே, இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த மூவாயிரம் மாணவர்களுக்கும் நாங்கள் கற்றுத் தந்தது என்ன தெரியுமா? அச்சம் இன்மை. கல்வியில் ஒரு பெருமிதம். யாரையும் பார்த்து காலில் விழுந்து வணங்காதீர்கள்.
இதைக் கற்றுக் கொடுத்துவிட்ட நான், அவர்களுக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கினால், what is the reason and what is the use will be my education I taught to students என்று சொன்னாராம்
அரசியார் மகிழ்ந்து இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் எப்படிப்பட்ட மாணிக்கங்களாக மிளிர்வார்கள் என்பதற்கு, அர்நால்ட் ஒரு சான்றாக இருப்பார் என்று சொன்னார்.
அன்று முதல் Arnoldian Tradition என்றே பெயர் வந்து விட்டது.
I wish Pathmaja, to be another Arnold for this Institution. And make the students as diamonds.
மாணவிகளே! நாளைக்கு நீங்கள் எல்லாம் வள்ளியம்மாள் பள்ளியை விட்டு விட்டு அயல் நாடுகளுக்கோ அல்லது சென்னயிலேயோ அல்லது வேறு நிறுவனங்களிலோ மிக உயர்ந்த பதவிகளை ஏற்க இருக்கிறீர்கள்.
கிட்டத்தட்ட நான் சொன்னால் ஒரு வேளை ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட இது ஒரு கல்யாணம் நடப்பது மாதிரி. நெசமா நடக்கிற கல்யாணம் எப்போவோ நடக்கும். ஆனால் கல்வி முடித்த பிறகு நீங்கள் இந்த மஞ்சள் துணியைப் போட்டு இருக்கிறீர்கள், கருப்பு துணிகளைப் போட்டு இருக்கிறீர்கள் என்று சொன்னால்,
டாக்டர் ராதா கிருஷ்ணன் சொன்னார்,
“The very rope which adorns you rather looks like the beautiful bride“ என்று சொன்னார். எனவே, உங்கள் வாழ்க்கை தொடங்கப்போகும் நாள் என்று சொன்னால், இந்த Academic Robe தான்.
நீங்கள் நல்லபடியாக கல்வியில் பெருமை அடைய வேண்டும். உலக நாடுகள் எங்கே வேண்டுமானாலும் போய் நீங்கள் பணி ஏற்றுக்கொள்ளலாம். நேற்று காலை தான் என்னுடைய உறவுப் பெண் சொன்னாள், நான் நார்வேக்குப் போகிறேன் என்று சொன்னாள்.
நார்வே போவதற்கும், சுவஸ்லர்லாந்து போவதற்கும், டென்மார்க் போவதற்கும், விப்ரோவிற்குப் போவதற்கும், சிட்கோவிற்குப் போவதற்கும், இல்லை அடக்கமாக வள்ளியம்மாள் போன்ற ஒரு கல்லூரியில் பேராசிரியராக போவதற்கும், ஏன் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் போவதற்கும் வாழ்க்கையை தொடங்கி இருக்கிற நீங்கள் எப்படியும் குறைந்தது, ஒரு ஐந்து ஆண்டுகளாவது நீங்கள் படித்ததற்கு நீங்கள் வேலை பார்க்க வேண்டும். அதை ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை, காரணம், படித்துவிட்டு வீட்டில் போய் உட்கார்ந்து இருப்பது தவறு.
The education, what we have learned in so much of perseverance, should be given to the society, and the society should be benefited by the knowledge of what we have gained.
அதனால்நான் உங்கள் தாய் தந்தையர் வந்து இருந்தால் சொல்லுவேன், எந்த பிள்ளயும் ஐந்து ஆண்டுகள் வேலை பார்க்கும் வரையில் திருமண பேச்சை பேசக்கூடாது.
இப்படி சொல்லலாமா சார் என்று கேட்டால், இந்த ஆண் பிள்ளைகள் எல்லாம் அலையட்டும் பெண்கள் கிடைக்க வில்லை என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
எனவே, வள்ளியம்மாள் கல்லூரி, வள்ளியர் என்று சொன்னாலே ரொம்ப தெளிவானவர் என்று பொருள். ஆற்றலும், அருமையும், திறமையும், பெருமையும் வாய்ந்த இளம் பிள்ளைகளான உங்களையெல்லாம் காணும்போது மகிழ்ச்சி பெருகுகிறது.
ஆ.மு.பரமசிவானந்தம் அவர்கள் இருந்து இருந்தால், அவர் கண்களில் நீர் மல்க எனக்கு இவ்வளவு பிள்ளைகளா என்று மகிழ்ந்து இருப்பார். எனவே, உங்களுக்கு நல்ல ஆட்சி குழுவினர் அமைந்து இருக்கிறார்கள்.
அண்ணா நகருக்கே ஒரு பெரிய அழகு சிற்பம் எது என்று கேட்டால் வள்ளியம்மாள் கல்லூரி தான். ஒரு காலத்தில் அண்ணா நகருக்கு அடையாளம் வளைவு என்று இருந்தது. அண்ணா நகருக்கு அடையாளம் வள்ளியம்மாள் கல்லூரி தான். யாராவது ஒருவர் வீட்டுக்கு முகவரி கேட்பது என்று இருந்தால், வள்ளியம்மாள் கல்லூரிக்கு பக்கத்தில் என்று சொல்வார்கள்.
அவ்வளவு புகழ் வாய்ந்த இந்த கல்லூரி வெல்க, வாழ்க, பட்டம் பெற்ற நீங்கள் வாழ்க்கையில் திட்டமிட்டு, தெளிவடைந்து உயர்வடைக என்று சொல்லி
I congratulate you, whole heartedly, the young graduates, you are coming out of this college, should keep not only the tradition of this college, they should claim to be this task for this society.
Thank You very much

Add a Comment