25TH GRADUATION DAY SPEECH
ON 05.07.2015
CHIEF GUEST’S SPEECH BY
THIRU.AVVAI NATARAJAN
Valliammal Women college,Annanagar-1
Mr.Maikandan,
Esteemed Professor Mr.Valavan
Academic advisor Mr.Natarajan,
Respected Principal Madam Pathmaja
Remarkable galaxy of graduates
I feel it is a great honour to enter to this Institution because and rather moved when I just enter because the very founder the great noble Dr.A.M.Paramasivanandham was my teacher.
I studied about three years under him and I know how his dream was this academic institution and every brick and mortar of this institution is because of the hard, loyal, tears, sweat and blood of Dr.A.M.Paramasivanandham.
I really appreciate Mr.Maikandan, who follows the foot path so sincerely that he was able to make the Graduation day associated with the founder’s day of Dr.A.M.Paramasivanandham.
I wish all my best for the future of this Valliammal Institution and it is my dream one day it will turn to be a University and Dr.Maikandan, could do all his efforts to that.
அன்புள்ள கல்லூரி முதல்வர் அவர்களே,
பெருந்தகை மெய்கண்டார் அவர்களே,
பெருந்தகை வளவன் அவர்களே,
நடராஜன் அவர்களே
ஆசிரியர் பெருமக்களே
பட்டம் பெருகின்ற மகிழ்ச்சியோடு இங்கே நிரம்பி வழிகின்றன உங்களைக் காண்கின்ற போது எனக்கு ரொம்ப மகிழ்சியாக இருக்கிறது.
பேராசிரியர் ஆ.மு.பரமசிவானந்தம் அவரிடத்தில் நான் மூன்றாண்டுகள் மாணவனாக படித்தவன். மாணவர் மீது அவர் எவ்வளவு பரிவு காட்டினார் என்பதை இப்போது நான் நினைத்தாலும் கூட என் நெஞ்சம் நெகிழ்கிறது.
நாங்கள் மாணவர்களாக இருந்தபொழுது அந்தி வேளையில் அவரின் இல்லத்துக்கே செல்வோம். அந்த பேராசிரியர் எங்களுக்கெல்லாம் சிற்றுண்டி தருவார். ஆக the ideal professor whom he could dream that always filled with Professor A.M.Paramasivanandham.
அவர் பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருடைய மனம் கண்ட கனவுதான் தன்னுடைய அருமை தாயாரை நினைக்கிற வகையில் வள்ளியம்மாள் திருப் பெயரில் இந்தக் கல்லூரியை அவர் தொடங்கினார்.
அவருடைய தாய்ப் பற்று மட்டும் இல்லை, அவருடைய தாய் மொழிப் பற்று, அவருடைய கல்வி விருப்பம், அவருடைய கடுமையான உழைப்பு, அதுவும் மகளிர் கல்லூரியாக என்று தொடங்க வேண்டும் என்ற மாட்சி இவைகளில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று காலை நீங்கள் வந்த நாளிதழ்களைப் புரட்டிப் பார்த்தால் the first 6 persons who have come with I.A.S., honour are all women. இது எவ்வளவு பெருமையாக இருக்கிறது பாருங்கள். மகளிர் கல்வி நிலையில் எவ்வள உயர்ந்து இருக்கிறார்கள் என்பதை பல்வேறு நிலைகள் எடுத்துக் காட்டினாலும் வள்ளியம்மாள் கல்லூரி in east or west this is the best in the area of Anna nagar.

Add a Comment