POST: 2015-10-08T12:51:28+05:30

அறிவியலில் தமிழ்வழிக்கல்வி -5
குழந்தை நலத் துறை
டாக்டர் தாரா நடராசன் எம்.டி., டி.சி.எச்.,
முன்னாள் முதல்வர், மதுரை மருத்துவக் கல்லூரி,
மதுரை

கடந்த ஐம்பது ஆண்டுகளில் குழந்தை நலமருத்துவம் மிகவேகமாக வளர்ச்சி பெற்றுப் பலவித ஆய்வுகளின் மூலம் தீராத நோய்களைத் தீர்க்க முடிகின்றன.

ஆனாலும் கூட நம் குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை நல வசதிகள்,
சீரான சுற்றுப்புறச் சூழ்நிலை,
பாதுகாக்கப்பட்ட குடிநீர்,
நல்ல சத்துணவு,
சிற்றூர்களில் போதிய மருத்துவ வசதிகள்,
பெண்கல்வியில் முன்னேற்றம்,
பெண்களின் பொருளாதார உரிமை போன்றவையெல்லாம் இன்னும் பின்தங்கியே இருக்கின்றன.

சிறு குடும்ப வாழ்வைப் பலரும் ஏற்று நடப்பதால் பிறக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் சிறந்த குடிமகனாக வளர்ப்பது பெற்றோரின் மற்றும் அரசினரின் கடமையாகும்.

இந்த அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாம் அப்போதுதான் நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய வசதியை வகுக்க முடியும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *