POST: 2015-09-25T12:12:42+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-21

பாடும் கலைஞர்கள், ஆர்வலர்களைக் கருத்திற்கொண்டு பாடல்களில் சொற்சிதைவும், பொருட்சிதைவும் நேராவண்ணம் பாடுதல் நலமாகும். பாடும் வழக்கில் அருகிக் காணப்படும் இராகங்களையெல்லாம் முயன்று பயின்று, அவற்றை இசைக்கும் திறம் வளர வேண்டும்.

கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இலக்கியம் பயில்வோர் இசையைத் துணைப்பாடமாகப் பயிலவும் பாட அமைவுகள் உருவாக வேண்டும்.

வானொலி, தொலைக்காட்சியில் தமிழிசைப் பாடல்கள் முறையாகப் பயிற்றுவிக்க ஆவன செய்தல் வேண்டும்.

தமிழிலக்கியக் கல்விக்கும் இசைப்புலமைக்கும் இயைபு உருவாவதோடு இசையியலுக்கும் இசைக்கலைக்குமிடையே நீங்கா உறவு அமைய வேண்டும். இந்நிலையில் நுண்ணாராய்ச்சியாகத் திகழும் இப்பண்ணாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்திவரும் பெருமக்களைத் தமிழுலகம் என்றும் நன்றியோடு போற்றும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *