POST: 2015-09-04T13:13:17+05:30

இன்றைய நிலையை நோக்கின் வடமொழியை அறவே நீக்குவது தெலுங்கு, கன்னட மொழிக்கு அரிதாகும்.
கன்னட மொழிக்கோ மிகவும் அரிது.
மலையாள மொழிக்கோ அரிதினும் அரிது.
தெலுங்கு மொழிக்கு மேலும் அரிது என்பார்
திராவிட ஒப்பிலக்கணம் கண்ட பேரறிஞர் கால்டுவெல்.

தனித்து நின்று இயங்கும் ஆற்றலை இவைகள் தமிழ்மொழி போல் பெறவில்லை. வட சொற்களை அறவே அகற்றிக்கொள்வது தமிழுக்கு மட்டுமே சாலும்.

இந்நிலையில் தமிழல்லாத பிற மொழிகள் மெல்ல மெல்ல வடமொழிச் சொற்களை விலக்குவது போலத் தோன்றினாலும், வடமொழியின் பெருக்கத்தை எந்நாளும் அவர்கள் குறைத்துக்கொள்ளமுடியாது. இன்றும் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிமாணவர்கள் வடமொழியை ஏற்பதோடன்றி இந்தியும் அவர்களுக்கு அரிய மொழியாக இல்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *