POST: 2015-08-30T11:19:45+05:30

தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-11

இன்றைய இசையிலும் 72 மேளகர்த்தா இராகங்கள் அடிப்படை
இராகங்களாக அமைந்திருந்தாலும், இவற்றில் 32 மேளகர்த்தா
இராகங்களும், அதனின்றும் பிறந்த இராகங்களுமே
பாடப்படுகின்றன. மற்ற 40 மேளகர்த்தா இராகங்களும்,விவாதி
மேளங்கள்` என வழங்கப்பட்டு அவற்றைப் பாடுவதும் அரிதாகக்
காணப்படுகின்றன. எனவே காலந்தோறும் பண்களைப் பாடுவதில்
தேர்ச்சிபெறத் தெரிந்து பாடுவது என்பது அருங்கலையாகவே
பண்ணாராய்ச்சி மாநாடுகளில் 23 பண்களையும், திருமுறைத்
திலகங்களாகிய நம் ஓதுவா மூர்த்திகள் மரபுவழியாக இசைத்துக்
காட்டும்போது இக்காலத்தில் `இராகங்கள்` என்றழைக்கப்படும்
20. குறிஞ்சி குறிஞ்சி (அ) அரிகாம்போதி இப்பண்களிலும் ஐயப்பாடுகள் உண்டு. ஒரே இராகத்தில் பண்கள் பல அமைந்திருப்பதைக் காணலாம். சான்றாகக் கொல்லி,ஆகிய நான்கு பண்களும் `நவரோசு` என்ற இராகத்திலேயே இசைக்கப்படுகின்றன.

140 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தியாகையர் கீர்த்தனைகளிலேயே அவற்றிற்குரிய இராகங்களில் நமக்கு ஐயம் தோன்றும்போது, 1,300 ஆண்டுகளுக்கு முன்னர்த்தோன்றிய அருங்களஞ்சியமாகிய தேவார இசையில் ஐயம் எழுவது இயற்கையே! எனவே, பலவகையில் நமக்குப்பண்ணாராய்ச்சி தெளிவைத் தோற்றுவிக்கும்.

சிலப்பதிகாரத்தில் புறஞ்சேரியிறுத்த காதையில் `ஆசான் திறம்` என்ற பண் குறிக்கப்படுகிறது. இதனைக் காந்தாரப்பண் என்று
உரையாசிரியர்கள் கருதினர். முல்லைநில மக்கள் ுழற்கருவியைக் கண்டறிந்து அதில் ஐந்து துளையிட்டு அதன்
வழித் தோன்றிய பண்ணிற்குத் தாரம் என்று பெயரிட்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *