POST: 2015-08-07T11:36:38+05:30

இந்தியப் பண்பாடு-29

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர்

கோயமுத்தூர் பாரதிய வித்யா பவனில்
26-06-1993 அன்று ஆற்றிய உரை

கோயில்கள் அமைப்பதில் வேந்தர்களுக்குத் தனியார்வம் இருந்தது. இந்த இந்தியப் பண்பாட்டிலும் கூடக் கோயில் பண்பாடு எப்படித் தனியாக வளர்ந்தது என்பதற்கு ஒரு சான்று காணலாம்.

மைசூருக்குப் போகிறோம். மன்னர் அரண்மனை இருக்கிறது – காசிக்குப் போகிறோம், அங்கே பவநகர் அரண்மனை, மேவார் அரண்மனை, பீஜப்பூர் அரண்மனை என்று அரண்மனைகள் பல இருக்கின்றன.

தமிழ்நாட்டில் அரண்மனைகளே இல்லை! ஏன் இல்லை? இராசராசன் தன்னுடைய அரண்மனையைக் கட்டிக்கொள்ளவில்லை,
குலோத்துங்கன் தன்னுடைய அரண்மனையைக் கட்டிக்கொள்ளவில்லை
இது எதைக் காட்டுகிறதென்றால், தன்னைவிடத் தனக்குப் பெரிய தலைவனுக்குக் கோயில் கட்டுவதுதான் வழக்கமாக இருந்தது. தவிர அந்தக் கோயிலில் வேண்டுமானால், தாம் போய் வாழலாம் என்று நினைத்தார்கள்.
தனக்கு வாழ்வு முடிந்த பின்பும் அந்தக் கோயில் நிற்கும் என்று கருதித் தம்மை ஆட்படுத்திக்கொண்டிருந்தார்கள். இதை நாம் எங்கும் காண முடியவில்லை. கோச்செங்கணான் என்ற வேந்தன் மட்டும் 70 கோயில்களைக் கட்டியிருக்கிறான். `எண்டோள் ஈசருக்கு எழுபது மாடம் அமைத்தோன்` என்பார்கள். இந்தக் கோயில் கட்டுவதில் They revelled in the construction of Temples, the great temple builders என பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைப் புகழ்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *