கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் விழாவில்(19.10.2013) தமிழ்க்கடல் ஔவை அவர்கள் பேசிய உரைத்துளிகள்:
வழக்குச்சொற்களை நூற்றுக்கு மேல் அடுக்கிக்காட்டிய கவியரசர் கண்ணதாசன்
———————————————————————————-
கவிதையென்பது இயற்கை உணர்வுகளையும் செயற்கையான அழகிய சொற்களால் பின்னுவது.
கவியரசர் கண்ணதாசன் படிப்பறிவு இல்லாத ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்வில் அல்லற்படும் போது அவலச்சூழலில் சிக்கும் பொழுதும் சொல்லுகிற வழக்குத்தொடர்களையே கவிதை வரிகளாக மாற்றுகிற கலை வித்தகம் வாய்ந்தவர்.
கருவில் பிறந்த அந்த உருவிற்கு உயிர்த்துடிப்பு தந்தவர் மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன்,வடிவ செழிப்பூட்டியவர் டி எம் சௌந்தரராஜன்,இந்த மூன்றையும் இணைத்து உலவ விட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.ஆறு மனமே ஆறு என்ற தொடரைக் கேட்டால் நடிகர் திலகம் முதலில் தெரிவார்.அந்த முதல் இதழை உரித்தால் டி எம் எஸ் வருவார்,மேலும் உரித்தால் எம் எஸ் வி தெரிவார்,இந்த நான்கையும் குவித்தால் கவியரசர் கண்ணதாசன் காட்சித்தருவார்.
அழும் போதும்,தொழும் போது கண்ணதாசனின் பாட்டு,வீதியெல்லாம் இவர் பாட்டு, வீடு வரை இவர் பாட்டு,காடு வரை என்ன கணக்கு கணந்தோறும் இவர் பாட்டு

Add a Comment