POST: 2015-06-10T07:09:04+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-12

நான் டார்வினையும், பிரான்சிஸ் கிரிக், ஜிம் வாட்சனையும் போற்றுகிறேன். தகுதிமிக்கவை உயிர்த்திருக்கின்றன எனும் கோட்பாட்டையோ, டிஎன்ஏ மரபொப்புமை முறையையோ படிக்கும் பொழுது என்னுள் பேருவகை பூப்பது உண்மை தான். ஆனாலும், மேக்பெத்தில் ‘நாளையும் மறுநாளையும்..’’ ஜூலியஸ் சீசரில் ‘‘குதிரை மீது வீற்றிருக்கும் அப்போலோவைப் போல ஏனிந்த மனிதன் இருபுறமும் கால்போட்டு இந்த குறுகிய உலகில் பயணிக்கிறான்…’’ போன்ற சேக்ஸ்பியர் எழுத்தோவியங்களைப் படிக்கும் ஆழ்ந்துவிடுகின்ற பேரானந்தத்தை அனுபவிக்க முடிவதில்லையே! இத்தகைய மாபெரும் அறிவியல் மேதைகள் அனைவரும் அளப்பரிய திறம்படைத்த மதிப்பிற்குரிய மனிதர்கள் என்பதில் ஐயமில்லை. இங்கே ‘மதிப்பிற்குரிய’’ எனும் பதத்தை ஜூலியஸ் சீசரில் மார்க் ஆண்டனி பயன்படுத்தியலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் பயன்படுத்தியமைக்கு மன்னிக்கவும்! ஆனாலும், சேக்ஸ்பியர் என்று வரும் பொழுது நான் எல்லைகட்டிக் கொள்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *