POST: 2015-04-28T09:03:51+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-6

சேக்ஸ்பியர் கையாண்ட தொடர்களில் சில புகழ்வாய்ந்த நூலாசிரியர்களால் தமது நூல்களுக்குத் தலைப்புகளாகப் பெருமையுடன் சூட்டப்பட்டுள்ளன.
ஃபால்க்னெர் தன்னுடைய புதினங்களுள் ஒன்றிற்கு மேக்பெத் நாடகத்திலிருந்து ‘கூச்சலும் கோபாவேசமும்’ (Sound and Fury), என்கிற தொடரினைத் தலைப்பாகக் கொடுத்துள்ளார்.
ராபெர்ட் ஃப்ராஸ்ட்டினுடைய ‘வெளியேறு, வெளியேறு’ (Out Out), ரோஸ் மெக்காலேயின் ‘பேதையால் பிதற்றப்பட்டது’ (Told by an Idiot) ஆகிய நூல் தலைப்புகளும் மேக்பெத் நாடகத்திலிருந்து எடுத்தாளப்பட்டவை தாம்.
மேலும் பல்வேறு சொற்றொடர்கள் அதே நாடகத்திலிருந்து எடுத்து நூலாசிரியர்களால் தமது நூல்களுக்குத் தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ராபெர்ட் ஸ்டோனின் நூலுக்கான தலைப்பு ‘போரிடும் நாய்கள்’ (Dogs of War) ஜுலியஸ் சீஸரிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
அதே போல, ஜான் கன்தருடைய ‘வெள்ளத்திலிருந்து எடுக்கப்பட்டது’ (Taken at the Flood),
லேன்ஸ் ஹில்லினுடைய ‘மனிதனாற்றுகின்ற தீங்கு’ (The Evil that men Do)
ஃபோர்டு மெடாக்ஸ் ஃபோர்டு எழுதிய ‘அதுவே பாடும் பறவை’ (That was the Nightingale)
ஃபெரெடெரிக் ரொனால்ட்ஸின் ‘வளமையின் கோமாளி’ (Fortune’s Fool)
ஃபிலிப் கே. டிக் இயற்றிய ‘பொருந்தாத காலம்’ (Time out of Joint), ஓக்டென் நாஷ் ‘மலர்ப் பாட்டை’ (The Primrose Path),
டொரோத்தி பார்க்கருடைய ‘கிணற்றைப் போல ஆழமானதல்ல’ (Not so Deep as a Well)
ஆகிய அனைத்துமே சேக்ஸ்பியருடைய ஆக்கங்களிலிருந்து எடுத்து ஆளப்பட்டவை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *